Ladies Finger Sambar in Tamil
வணக்கம் நண்பர்களே..! இப்பதிவில் நாம் வெண்டைக்காய் சாம்பார் சுவையாக வைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். வெண்டைக்காய் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் பேச்சுவாக்கில் வெண்டைக்காய் சாப்பிடு மூளை நன்றாக வேலை செய்யும் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு வெண்டைக்காயில் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெண்டைக்காயை சிலர் பச்சையாக சாப்பிட விரும்புவார்கள்.. சிலர் பொரியல் செய்து சாப்பிட விரும்புவார்கள்.. இன்னும் சிலர் சாம்பார் வைத்து சாப்பிட விரும்புவார்கள். அந்த வகையில் நீங்கள் வெண்டைக்காய் சாம்பார் செய்து சாப்பிட விரும்பினால் இப்பதிவை முழுவதுமாக படித்து வெண்டைக்காய் சாம்பார் சூப்பராக வைத்து பழகுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Make Ladies Finger Sambar in Tamil:
தேவையான பொருட்கள்:
- நெய் – 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 10
- தக்காளி – 2
- வெண்டைக்காய் – 6
- பச்சை மிளகாய் – 3
- கருவேப்பிலை – 2 கொத்து
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- மல்லி தூள் – 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
- புளி கரைசல் – 1/2 கப்
- துவரம் பருப்பு – 1 கப்
- உப்பு – சுவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள்:
- நெய் – 1 டீஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- உளுந்தப்பருப்பு – 1 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 2
மொறு மொறு வெண்டைக்காய் பக்கோடா இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. சாப்பிட்டுக்கிட்டே இருப்பிங்க..
வெண்டைக்காய் சாம்பார் எப்படி வைப்பது.?
ஸ்டேப் -1
முதலில் துவரம்பருப்பை நன்றாக கழுவி எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் துவரம்பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
அடுத்து, அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் சேர்த்து கொள்ளுங்கள். நெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
ஸ்டேப் -3
பிறகு, அதில் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து 5 முதல் 7 நிமிடம் வரை வதக்க வேண்டும். அடுத்து இதனுடன் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகப் பொடி சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
ஸ்டேப் -4
இப்போது, இதில் புளி கரைசல், நறுக்கி வைத்த தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
ஸ்டேப் -5
இந்நிலையில் வேகவைத்துள்ள பருப்பை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொத்தமல்லி சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
ஸ்டேப் -6
இறுதியாக மற்றொரு தாளிப்பு கடாயை வைத்து அதில் நெய் சேர்த்து தாளிப்பிற்கு தேவையான பொருட்களை சேர்த்து தாளித்து வெண்டைக்காய் சாம்பாரில் ஊற்றினால் சூப்பரான சுவையான வெண்டைக்காய் சாம்பார் தயார்..!
வெண்டைக்காய் மசாலா இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |