சுவையான வெங்காய சாதம்
சமையல் தனி கலை என்றால், என்ன சமையல் செய்வது என்று யோசிப்பது மிகவும் கடினம். நாம் தேர்தெடுக்கும் சமையல் அனைவருக்கும் பிடித்த உணவாகவும் இருக்க வேண்டும். எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் வகையில் மதியஉணவை தயாரிக்க வேண்டும். ஒரே மாதிரியான சமையல் என்றால் சாப்பிட மாட்டார்கள். தினம் ஒரு வகை தயாரிக்க வேண்டும். சிலர் காய்களை சாப்பிட மாட்டார்கள் அவர்கள் விரும்பாத காய்களை அவர்களுக்கு பிடித்த சுவையில் தயாரிக்க வேண்டும் இப்படி சமையல் செய்ய ஆரம்பிக்கும் போது பல சறுக்கல்கள் வரும். அனைவருக்கும் பிடித்த சுவையில் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு சாத வகை தான். இன்று இந்த பதிவில் பார்க்க போகின்றோம். ஈஸியாக வெங்காய சாதம் அனைவருக்கும் பிடித்த சுவையில் செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வெங்காய சாதம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
தேவையான பொருட்கள்:
புலாவ் அரிசி – 1/2 கிலோ
வெங்காயம் – 5 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3
கிராம்பு -2
ஏலக்காய் -2
பட்டை – சிறிதளவு
நெய் – தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு சுத்தம் 20 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.
இப்போது குக்கரில் நெய் சேர்த்து ஏலக்காய், கிராம்பு, மற்றும் பட்டை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் சுத்தம் செய்துவைத்துள்ள அரிசியை சேர்த்து கிளறிவிடவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடிவிடவும்.
அரிசி நன்றாக வெந்ததும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான வெங்காய சாதம் ரெடி.
ஆரோக்கியத்தை வழங்கும் பிரண்டை சட்னி எளிமையாக செய்வது எப்படி?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |