வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

லஞ்சுக்கு இந்த ஈஸியான ரெசிபி செய்யுங்க.. டேஸ்ட் சூப்பரான இருக்கும்..!

Updated On: November 16, 2023 9:16 AM
Follow Us:
Vengaya Sadam Seivathu Eppadi
---Advertisement---
Advertisement

Vengaya Sadam Seivathu Eppadi

வணக்கம் நண்பர்களே.. இந்த அவசரகாலகட்டத்தில் அனைவரும் காலையில் எழுந்து அவசர அவசரமாக காலை உணவு சமைத்து மதிய உணவு சமைத்து வேலைக்கும் கல்லூரிக்கும் சென்று கொண்டிருக்கிறோம். இதில் நமக்கு பெரிய வேலை என்றால் லன்ச் சமைப்பது தான்.. தினமும் என்ன லன்ச் சமைப்பது என்று புலம்பி கொண்டிருப்போம். முக்கியமாக சொல்லப்போனால் குழந்தைகள்,  தினமும் ஒரே சாப்பாடே செய்து கொடுக்காமல் புதுசா எதாவது செய்து கொடுங்கள் அம்மா.. என்று சொல்வார்கள். எனவே, மிகவும் எளிய முறையில் அதுவும் 15 நிமிடத்தில் லஞ்சுக்கு சூப்பரான சுவையான வெங்காய சாதம் செய்வது எப்படி.? என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Make Onion Rice at Home in Tamil:

How To Make Onion Rice at Home in Tamil

தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் – 3 ஸ்பூன் 
  • கடலை பருப்பு – 2 ஸ்பூன் 
  • கடுகு – 1/2 ஸ்பூன் 
  • சீரகம் – 1/2 ஸ்பூன் 
  • வேர்க்கடலை – 1/2 கப்
  • பூண்டு – 10 பற்கள் 
  • பெரிய வெங்காயம் – 2
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் 
  • பெருங்காய தூள் – 1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன் 
  • உப்பு – 1/2 ஸ்பூன் 
  • பச்சை மிளகாய் – 4
  • கருவேப்பிலை – 2 கொத்து 
  • புளி கரைசல் – 1/4 கப்
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

ஸ்டேப் -1

முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள்.

ஸ்டேப் -2

 how to make onion rice in tamil

அடுத்து, இதனுடன் கடலை பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வருத்து கொள்ளுங்கள். பின், இதில் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் மற்றும் நீட்டவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3

இந்நிலையில், வெங்காயம் வதங்குவதற்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி கொள்ளுங்கள்.

சுவையான மற்றும் சூப்பரான லன்ச் உருளைக்கிழங்கு சாதம் செய்முறை.

ஸ்டேப் -4

அடுத்து, 1/4 கப் அளவிற்கு புளி தண்ணீர் சேர்த்து தண்ணீர் நன்கு வற்றும் வரை 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதன் பிறகு, இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடுங்கள்.

 easy lunch recipes in tamil

ஸ்டேப் -5

இப்போது, சூடான சாதத்தினை இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். அவ்வளவு தாங்க.. 15 நிமிடத்தில் சுவையான லஞ்ச் ரெசிபி தயார்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now