வெங்காய தொக்கு இப்படி ஒருமுறை செஞ்சி பாருங்க..! 4 இட்லி எக்ஸ்ட்ராவா உள்ளபோகும்..!

Advertisement

சுவையான வெங்காய தொக்கு

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! நம் அனைவரின் வீடுகளிலும் எப்பொழுதும் காலையில் செய்வது இட்லி தோசை மட்டும் தான். அவ்வளவு ஏன் சில வீடுகளில் வேளையும் இட்லி தோசை தான் செய்வார்கள். அப்படி இட்லி தோசை மட்டும் மாறாமல் இருக்கலாம். ஆனால் அதனுடன் சேர்த்து சாப்பிடும் சைடிஸ் எப்படி வேணுனாலும் செய்யலாம். அதனால் தான் இன்று வெங்காயத்தை மட்டும் வைத்து வெங்காயத் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கப்போகிறோம். சரி வாங்க நண்பர்களே சுவையான வெங்காய தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வெங்காய தொக்கு செய்வது எப்படி..? 

தேவையான பொருட்கள்: 

  1. கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
  2. வெள்ளை உளுந்து – 1 ஸ்பூன்
  3. சீரகம் – 1 ஸ்பூன்
  4. வெந்தயம் – 1/2 ஸ்பூன்
  5. பூண்டு – 6 பற்கள்
  6. பெரிய வெங்காயம் – 4
  7. வரமிளகாய் – 6
  8. புளி – சிறிதளவு
  9. கடுகு – 1 ஸ்பூன்
  10. கருவேப்பிலை – 1 கொத்து
  11. பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
  12. உப்பு – தேவையான அளவு
  13. எண்ணெய் – தேவையான அளவு

வெங்காய தொக்கு செய்முறை: 

வெங்காய தொக்கு செய்முறை

முதலில் கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். பின் அதில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு கடலைப்பருப்பு, 1 ஸ்பூன் – வெள்ளை உளுந்து, 1 ஸ்பூன் – சீரகம், 1/2 ஸ்பூன் – வெந்தயம், பூண்டு பற்கள் – 6 இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

இட்லி மாவு இல்லாமலே சுவையான ரெசிபி அதுவும் 10 நிமிடத்தில் செய்யலாம் வாங்க

வெங்காயம் சேர்த்து கொள்ளவும்: 

வெங்காயம் சேர்த்து கொள்ளவும்

பின் அதில் 4 பெரிய வெங்காயத்தை நறுக்கி அதில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, அதில் 1/2 மணி நேரம் சூடான தண்ணீரில் நன்றாக ஊறவைத்த வரமிளகாயை சேர்த்து கொள்ளுங்கள். பின் அதில் ஒரு நெல்லிக்காய் அளவில் புளியை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

நாம் சேர்த்த பொருட்கள் அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு, அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடுங்கள்.

இட்லி மாவு இல்லாத நேரத்தில் இந்த ரெசிபியை செய்து பாருங்க

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்: 

வதக்கிய பொருட்கள் ஆறியதும் அதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைக்கவும்: 

கடாயை அடுப்பில் வைக்கவும்

பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன் சேர்த்து பொரிந்து வந்தவுடன் அதில் கருவேப்பிலை, பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன், சேர்த்து தாளித்த பிறகு நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்டை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

தொக்கு நன்றாக கொதித்து நிறம் மாறி வரும் வரை நன்றாக கொதிக்கவிட வேண்டும். அவ்வளவு தான் இட்லி தோசைக்கு ஏற்ற வெங்காய தொக்கு ரெடி. இந்த மாதிரி ஒரு முறை செய்து பாருங்க 4 இட்லிக்கு மேல உள்ளபோகும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement