விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை | Vinayagar Chaturthi Special Food in Tamil..!
விநாயகருக்கு உகந்த நாளாக வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும் பண்டிகை தான் விநாயகர் சதுர்த்தி. இத்தகைய விநாயகர் சதுர்த்தியின் போது ஒவ்வொருவரும் அவர் அவருடைய வீட்டில் இனிப்புகளை செய்து பூஜை செய்வார்கள். அப்படி பார்த்தால் விநாயகருக்கு பிடித்த எண்ணற்ற இனிப்பு வகைகள் இருக்கிறது. என்ன தான் நிறைய இனிப்பு வகைகள் இருந்தாலும் கூட கொழுக்கட்டை என்பது தான் மிகவும் சிறப்பான ஒன்று. அதனால் இன்று வழக்கமாக செய்யும் கொழுக்கட்டை போல் இல்லாமல் ரவா கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
Rava Modak Recipe in Tamil:
- ரவா- 3/4 கப்
- வெல்லம்- 200 கிராம்
- சர்க்கரை- 1 ஸ்பூன்
- நெய்- 3 ஸ்பூன்
- தண்ணீர்- 1 3/4 கப்
- தேங்காய் துருவல்- 1 கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
ரவை கொழுக்கட்டை செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1 | முதலில் அடுப்பில் ஒரு கடையினை வைத்து அதில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய்த்தூளினை சேர்த்து வறுத்து கொள்ளுங்கள். |
ஸ்டேப்- 2 | பின்பு மற்றொரு கடாயில் 200 கிராம் வெல்லத்தினை தூளாக செய்து போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். |
ஸ்டேப்- 3 | அதன் பிறகு வெல்லம் நன்றாக கரைந்து பாகு பதத்திற்கு வந்துவிடும். |
ஸ்டேப்- 4 | இப்போது தயார் செய்து உள்ள வெல்லப்பாகில் வறுத்த தேங்காயினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் பூரணம் தயார். |
ஸ்டேப்- 5 | அடுத்து ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து ரவையினை வறுத்துக்கொள்ளவும். இப்போது வறுத்த ரவையுடன் |
ஸ்டேப்- 6 | பின்பு வறுத்த ரவையுடன் 1 3/4 கப் தண்ணீர் மற்றும் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொண்டே இருங்கள். |
ஸ்டேப்- 7 | கடாயில் உள்ள ரவை மாவு நன்றாக கெட்டியான பதம் வந்தவுடன் அதனை கீழே இறக்கி ஆற வைய்யுங்கள். |
ஸ்டேப்- 8 | கடைசியாக ஆற வைத்துள்ள மாவில் சிறுதளவு எடுத்து உருண்டையாக பிடித்து அதனை ரவை கொழுக்கட்டை செய்யும் அச்சில் வைத்து அதன் உள்ளே வெல்லப் பூரணத்தினையும் வைத்து மூடி விடுங்கள். |
ஸ்டேப்- 9 | இத்தகைய முறையில் மற்ற அனைத்தினையும் செய்து இட்லி பானையில் இட்லி வேக வைப்பது போல வேக வைத்து எடுத்தால் போது ரவை கொழுக்கட்டை தயார். |
விநாயகர் சதுர்த்திக்கு இந்த போளியை செய்து பாருங்கள்.. சூப்பரா இருக்கும்..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |