விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிபி
வருகின்ற திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருகின்றது. இந்நன்னாளில் விநாயகருக்கு பிடித்த உணவுகளை செய்து வணங்குவோம். அதில் கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், லட்டு, எள்ளு உருண்டை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவார்கள். அதில் மொறு மொறு நொறுக்கு தீனி என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மிகவும் விரும்புவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் மொறு மொறு நிப்பாட்டை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
நிப்பாட்டு செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்த வேர்க்கடலை – 1/2 கப்
அரிசி மாவு – 2 கப்
ரவை – 1/4 கப்
சீரகம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
எண்ணெய் – தேவைக்கேற்ப எண்ணெய்
வறுத்த கடலை பருப்பு – 1/2 கப்
சோள மாவு – 2 தேக்கரண்டி
எள் – 2 தேக்கரண்டி
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?
நிப்பாட்டு செய்யமுறை:
படி 1
முதலில் வறுத்த வேர்க்கடலை மற்றும் வறுத்த கடலை பருப்பை கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும்.
படி 2
பருப்பு கலவையுடன், அரிசி மாவு, சோள மாவு,ரவை, எள், சீரகம்,பெருங்காய தூள், கறிவேப்பிலை, மிளகாய் தூள் மற்றும் உப்பு சுவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும்.
படி 3
ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, எண்ணெய் சூடானதும், சூடான எண்ணெயை நீங்கள் தயாரித்து வைத்துள்ள மாவின் மீது ஊற்றவும். அந்த மாவை நன்றாக எண்ணையுடன் சேர்த்து பிசையவும்.
படி 4
நன்றாக கலந்த மாவில் மாவில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து மாவு மென்மையாக மாறும் வரை பிசையவும்.
படி 5
மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக பிரித்து, அதனை தட்டையாக தட்டவும்.
படி 6
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும். தட்டையாக தட்டி வைத்துள்ள மாவுகளை போட்டு, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
படி 7
வியநகர் சதுர்த்தி ஸ்பெஷல் மொறு மொறு நிப்பாட்டு இப்போது ரெடி. இதனை நீங்கள் விநாயகர் சதுர்த்தி பூஜையில் கணபதிக்கு படைக்கலாம்.
இந்த நிப்பாட்டு மாலை நேர சூடான தேநீருடன் இணைத்து உண்ணுங்கள்,மிகவும் சுவையானதாக இருக்கும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |