தாறுமாறான சுவையில் விரால் மீன் வறுவல் வீட்டிலேயே செய்வது எப்படி..?

Advertisement

Viral Meen Varuval

பொதுவாக அனைவருடைய வீட்டிலும் வாரத்திற்கு ஒரு நாள் அதுவும் ஞாயிற்றுக்கிழமை அன்று அசைவ சாப்பாட்டினை தான் சாப்பிடுவார்கள். அதுவும்  ஒரு சிலரது வீடுகளில் வாரத்திற்கு 1 நாள் இல்லாமல் 2 மற்றும் 3  நாட்கள் கூட அசைவம் சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி பார்க்கையில் தற்போது புரட்டாசி மாதம் வந்துவிட்ட காரணத்தினால் 1 மாதம் அசைவம் சாப்பிட முடியாமல் இருக்க வேண்டிய நிலை ஆனது இருக்கும். அப்படி பார்த்தால் நாளை புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் பிறக்கிறது. ஆகையால் நாளை பெரும்பாலான வீடுகளில் சிக்கன் மற்றும் மட்டன் அதிகமாக எடுப்பதை விட மீன் தான் முதலில் சமைப்பார்கள். அதுவும் ஒரு சிலரது வீடுகளில் என்னென்ன மீன் வாங்கி சமைக்கலாம் என்று பட்டியலிட்டு பார்ப்பார்கள். அந்த வகையில் இன்று சுவையான விரால் மீன் வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

விரால் மீன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

  • விரால் மீன்- 1 கிலோ
  • பூண்டு- 5 பற்கள்
  • சின்ன வெங்காயம்- 5
  • துருவிய தேங்காய்- எலுமிச்சை அளவு
  • மிளகாய் தூள்- 1/4 கப்
  • சோம்பு- 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்- தேவையான அளவு

வாழைப்பூவில் பக்கோடா ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க

விரால் மீன் வறுவல் செய்முறை:

முதலில் வாங்கி வைத்துள்ள விரால் மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த மீனை வட்ட வட்டமாக வறுப்பதற்கு ஏற்றவாறு நறுக்கி மீண்டும் ஒரு முறை சுத்தமான தண்ணீரில் அலசி கொள்ள வேண்டும்.

விரால் மீன் வறுவல்

இப்போது துருவிய தேங்காய், 1 ஸ்பூன் சோம்பு மற்றும் சின்ன வெங்காயம் என இவற்றை எல்லாம் அதில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைக்கவும்.

அடுத்தபடியாக ஒரு பவுலில் கழுவி வைத்துள்ள மீன், அரைத்த தேங்காய் பேஸ்ட், எடுத்துவைத்துள்ள மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு மற்றும் நசுக்கிய 5 பற்கள் பூண்டு என இவற்றை எல்லாம் அதில் போட்டு நன்றாக கலந்து 10 நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள்.

10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் மீன் வறுக்கும் கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மசாலா தடவி வைத்துள்ள மீனை அதில் ஒன்று ஒன்றாக மொத்தம் 3 முதல் 5 மீனை போட்டு எண்ணெய் சேர்த்து நன்றாக வேக விடுங்கள்.

மீன் நன்றாக வெந்து வந்த பிறகு  அதனை மறுபுறம் திருப்பி போட்டு பொன் நிறமாக வந்தவுடன் எடுத்ததால் போதும் விரால் மீன் வறுவல் தயார்.

இதேபோல் மற்ற மீன்களையும் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

நாளைக்கு ஐப்பசி 1 வஞ்சிரம் மீன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement