தமிழ்நாடு 10th,12th தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட்டை எப்படி பார்ப்பது?

தமிழ்நாடு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட்டை எப்படி பார்ப்பது? – 10th and 12th Result 2022

10th and 12th Result 2022: நண்பர்களுக்கு வணக்கம்.. தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடவுள்ளார்.. சரி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்

  • 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: காலை 9.30 மணிக்கும்
  • பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: (S.S.L.C) நண்பகல் 12.00 மணிக்கும் வெளியாகிறது.

அதிகாரப்பூர்வ இணையதளம்:

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட்டை எப்படி பார்ப்பது?

தேர்வர்கள் மேல் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centre) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்:

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
SHARE