இன்று வெளியாகிறது 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2021 | TN HSC Exam 2021 Result
பொதுநலம் வாசகர்களுக்கு எங்களுடைய அன்பான வணக்கங்கள்.. கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு 12 வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்திருந்தது. இருப்பினும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு மதிப்பெண்களை எப்படி கணக்கிடுவது என்று குழப்பத்துடன் இருந்தன. ஆகவே 2020 to 2021 ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்து தமிழக அரசு 12.07.2021 அன்று அரசாணையை வெளியிட்டுள்ளது. அது குறித்த தகவல்களை இந்த பதிவில் நாம் படித்தறியலாம்.
10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் முறை:
வகுப்பு | மதிப்பெண்கள் |
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் | சராசரியாக 50% மதிப்பெண்கள் |
11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் | 20% மதிப்பெண்கள் |
12-ம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பீட்டின் அடிப்படையில் | 30% மதிப்பெண்கள் |
மேல் அட்டவணையில் கூறப்பட்டுள்ளது போல், கணக்கிடப்பட்டுள்ள மதிப்பெண் பட்டியல் தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. அவற்றை சரி பார்க்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்:
அதனால், 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஜூலை 31-ஆம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று (19.07.2021) காலை 11 மணிக்கு தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட இருக்கிறார்.
ஆகவே மாணவர்கள் உங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in,dge.tn.gov.in என்ற தளத்தில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளியில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in இந்த தளத்தில் ஜூலை 22 முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
12-ம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்–> | 12th Result Check 2021 |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |