இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – ரிசல்ட் பார்ப்பது எப்படி?

Advertisement

How to Check Class 12 Result in Tamil

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது. ஆக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் தங்களது மதிப்பெண்களை தெரிந்துகொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவின் வாயிலாக நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – ரிசல்ட் பார்ப்பது எப்படி?

நடந்து முடியாக பிளஸ்டூ பொதுத்தேர்வில் 8.17 லட்சம் மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். அவர்களது விடை தாள்கள் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 21-அம தேதி வரை நிறுத்தப்பட்டன இந்நிலையில் ஏற்கனவே அறிவிப்பட்டி இன்று காலை 9.30 மணி அளவில் முடிவுகள் வெளியாகின்றன. இந்த தேர்வு முடிவுகளை கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.

மாணவர்கள் இணையதளம் மூலமாக தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், மைய மற்றும் கிளை நூலகங்களிலும், தங்களது பள்ளிகளிலும் தெரிந்துகொள்ளலாம்.

அதுமட்டும் இன்றி மாணவர்களின் மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செயிகளாக மதிப்பெண்கள் அனுப்பப்படும்.

இணையதளம் மூலமாக பார்க்க விரும்புபவர்கள்

  • www.tnresults.nic.in,
  • www.dge1.tn.nic.in,
  • www.dge2.tn.nic.in,
  • www.dge.tn.gov.in

என்ற இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement