Samsung-ற்கு போட்டியாக Motorola அறிமுகம் செய்யும் Stylus போன்..! இதை பற்றி தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Motorola Moto G Stylus Mobile Phone Review in Tamil

இன்றைய சூழலில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் ஸ்மார்ட் போனின் மீது மிகவும் ஆசையும்,  ஆர்வமும் கொண்டுள்ளார்கள். அதனால் எந்த புதிய ஸ்மார்ட் போன் வந்தாலும் அதனை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதனால் முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி போட்டு கொண்டு புதிய புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்கின்றன.

அதே போல் தான் Samsung நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக Motorola நிறுவனம் Moto G Stylus என்ற ஸ்மார்ட் போனை புதிதாக அறிமுகம் செய்ய உள்ளது. அதனால் இந்த Moto G Stylus என்ற ஸ்மார்ட் போனை பற்றிய தகவலை இன்றைய பதிவில் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Motorola Moto G Stylus Mobile Phone Information in Tamil:

Motorola Moto G Stylus Mobile Phone Information in Tamil

Lenovo-க்கு சொந்தமான Motorola, Moto G 5G மற்றும் Moto G Stylus 2023 ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமான ரூ.16,500 விலை பிரிவிற்குள் இந்த புதிய Moto G Stylus (2023) சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் 31, 2023 அன்று அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  1. Moto G Stylus ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.
  2. Moto G Stylus ஆனது Octa core Helio G85 செயலியை கொண்டிருக்கும்.
  3. இந்த இரண்டு புதிய போன்களும் Android 13 தளத்தில் இயங்குகிறது.

புதிதாக மொபைல் போன் வாங்க போறிங்களா அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

சிறப்பம்சங்கள்:

இது HD+ Resolution மற்றும் 120 Hz புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. மேலும் இந்த மொபைலில் Snapdragon 480+ Chipset மற்றும் 4 GB RAM உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த Moto G Stylus 5G 2023 போன் ஆனது 6.8 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 50 MP முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் இதில் ஒரு ஸ்டில்ஸ் சப்போர்ட், டால்பி அட்மோஸ் உடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கோடை காலத்தில் குளு குளுன்னு இருக்க AC வாங்க போறீங்களா அப்போ இந்த AC-தான் சரியாக இருக்கும்

இதன் வடிவமைப்பு தட்டையானது. மேலும் இதன் வலது விளிம்பில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்களை கொண்டுள்ளது. இதன் பவர் பட்டன் Finger print ஸ்கேனருடன் ஒருங்கிணைக்கப்பட்டதாக இருக்கும்.

மேலும் இந்த போனில் 3.5mm Headphone jack, USB Type-C port, Microphone, Speaker Grill மற்றும் Slot for stylus ஆகியவை கீழே அமைந்துள்ளது. இது 10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இந்த போன் Midnight Blue, Glam Pink ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கின்றது.

கோடை காலத்தில் AC வாங்க வேண்டும் என்று இருக்கிறீர்களா அப்போ இந்த AC-தான் சரியாக இருக்கும்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement