சூப்பரான அம்சங்களுடன் குறைந்த விலையில் வரப்போகிறது இந்த ப்ளூடூத் ஹெட்செட்..!

Nothing Ear 2 Review in Tamil

Nothing Ear 2 Review in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம்.காம் பதிவில் தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்று சூப்பரான அம்சங்களுடன் விற்பனைக்கு வரப்போகிற Nothing 2 வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்செட் பற்றிய விவரங்களைப் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். இன்று இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஹெட்செட்டை பயன்படுத்தாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. மக்களின் அன்றாட தேவையில் இதுவும் ஒன்றாகிவிட்டது. அதற்கேற்றவாறு பல நிறுவனங்கள் பல மாடல்களில் வயர்லெஸ் ஹெட்செட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நத்திங் நிறுவனம் வெளியிட்ட நத்திங் இயர் 2 வயர்லெஸ் ஹெட்செட் என்னென்ன அம்சங்களை பெற்று விற்பனைக்கு வருகிறது என்பதை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க..!

ஸ்மார்ட் டிவி வாங்கணுமா..! அதுவும் குறைந்த விலையில் வாங்கணுமா..! அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அசத்தலான அம்சத்துடன் வருகிறது இந்த ஸ்மாட் டிவி

 

Nothing Ear 2 Details in Tamil:

Nothing Ear 2 Launch Date in Tamil:

Nothing Ear 2 மார்ச் 28 ஆம் தேதியன்று விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நத்திங் இயர் 2 சிறப்பம்சங்கள்:

நத்திங் இயர் 2 ஆனது, டூயல்-சேம்பர் (Transparent Dual-chamber) டிசைனுடன் வருகிறது. இது நிறுவனத்தின் 11.6 மிமீ கஸ்டமைஸ்டு ட்ரைவர்களால் (Customised drivers) இயக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு இயர் பீஸிலும் உள்ள மைக்ரோபோன்கள் 3 AI சப்போட்டுடன் வருகிறது. இதில் உள்ள ANC (Active Noise Cancellation) சிறப்பான கேட்கும் அனுபவத்தை அளிக்கிறது.

நத்திங் 2 இயர் பட்ஸ் ஆனது, ப்ளூடூத் 5.3 கனெக்ட் செய்யும் வகையில் வருகிறது. இது புதிதாக உள்ள  LHDC 5.0 கோடெக்கை ஆதரிக்கிறது. அதுமட்டுமில்லாமல் AAC மற்றும் SBC கோடெக்கைகளையும் ஆதரிக்கிறது.

இடுப்பு வலி இல்லாமலும், காசு கொடுக்காமலும் ட்ரெஸை ஐயன் பண்ணலாம்..எப்படி தெரியுமா.?

 

இந்த இயர் பட்ஸ் ஆனது, நீர் மற்றும் தூசியினால் ஏற்படும் பாதிப்பை எதிர்க்கும் வகையில் IP54 மதிப்பீட்டுடன் வருகிறது.

நத்திங் இயர் 2 ஒவ்வொன்றிலும் 33MA பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு போன்களுடன் தடையற்ற இணைப்பை ஏற்படுத்துகிறது.

நத்திங் இயர் 2-வின் விலை:

நத்திங் இயர் 2 ஆனது, வருகிற மார்ச் 28 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இவற்றின் விலை 9,999 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com