Pebble Cosmos Smartwatch Review in Tamil
அனைவருக்கும் வாட்ச் காட்டும் பழக்கம் இருக்கும். நேரத்தை பார்ப்பதற்கு வாட்ச் கட்டுகிறோம் என்று சொல்வதை விட ஸ்டைலான தோற்றத்திற்காக கட்டுகிறோம் என்றே சொல்லலாம். ஆமாங்க பல வகையான மாடல்களில் ஸ்மார்ட் வாட்ச்கள் உள்ளன. போட்டி போட்டு கொண்டு பல வகையான பிராண்டுகளில் ஸ்மார்ட் வாட்ச்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் Pebble நிறுவனம் Pebble Cosmos Bold என்ற ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தி உள்ளது. Pebble Cosmos Bold என்னென்ன அம்சங்களுடன் வருகிறது.? விலை என்ன.? போன்ற விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Pebble Cosmos Bold ஸ்மார்ட் வாட்ச் டிஸ்பிளே எப்படி இருக்கிறது.?
இதன் டிஸ்பிளே HD தீர்மானம் கொண்ட 1.39 இன்ச் அளவுள்ள IPS டிஸ்பிளேவாக இருக்கிறது. 500 நிட்ஸ் அளவு பிரைட்னெஸுடன் டிஸ்பிளே விவரங்களை தெளிவாக காட்டுகிறது. மேலும் ஸ்க்ரீன் ஆனது 360 x 360 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது.
பேட்டரி எவ்வளவு நாள் நீடிக்கிறது.?
Pebble Cosmos Bold ஸ்மார்ட் வாட்ச் 260 mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் முழு சார்ஜ் ஆக 2 மணி நேரம் ஆகிறது. மேலும் இது 7 நாட்கள் வரை சார்ஜ் ஆனது நீடிக்கிறது.
ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 விலை மற்றும் அதன் அம்சங்கள்..! |
Pebble Cosmos Bold ஸ்மார்ட் வாட்ச்சின் சிறப்பம்சங்கள்:
உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கிய குறிப்புகளை காட்டும் வகையில் SPO2 மற்றும் இதய துடிப்பு மானிட்டர் போன்ற அம்சங்களுடன் வருகிறது.
பெப்பில் காஸ்மாஸ் போல்ட் ஸ்மார்ட் வாட்ச் அலாரம், அறிவிப்பு, டிஸ்பிளே டைமர், ஃப்ளாஷ்லைட், வாய்ஸ் அசிஸ்டென்ட் போன்ற பல அம்சங்களுடன் வருகிறது.
மேலும் ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் வருவதோடு 100-க்கும் அதிகமான வாட்ச் பேஸ்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
நீரிலிருந்து பாதுகாக்கும் வகையில் IP67 வாட்டர் ப்ரூஃபுடன் வருகிறது.
45 நாள் சார்ஜ் நிற்கும் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச்..! |
Pebble Cosmos Bold Smart Watch Price:
பெப்பில் காஸ்மாஸ் போல்ட் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை ரூ. 2,299 மட்டுமே. அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்மார்ட் வாட்ச் ஜெட் பிளாக், மிட்நைட் கோல்ட், விண்டர் ப்ளூ மற்றும் மிஸ்டி கிரே போன்ற வண்ணங்களில் கிடக்கிறது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |