Redmi Smart Fire Tv 32 Inch Review in Tamil
இந்தியாவில் பலவகையான மாடல்களில் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் டிவியில் 43 இன்ச், 55 இன்ச் மற்றும் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பினும் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் தான் அதிகளவில் வாங்கப்படுகின்றன. ஏனென்றால் அவை குறைந்த விலையில் தரமான அம்சங்களுடன் வருகின்றன. அந்த வகையில் இன்றைய பதிவில் பார்க்க இருப்பது Redmi Smart Fire TV 32 Inch என்னென்ன அம்சங்களுடன் வருகிறது..? அவற்றின் விலை எவ்வளவு போன்ற விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
வாட்ச் வாங்க போறீங்களா..? அப்போ பல அம்சங்களுடன் அறிமுகமான இந்த ஸ்மார்ட் வாட்சை வாங்கி பாருங்கள்.! |
Redmi Smart Fire TV 32 Inch Launch Date in Tamil:
ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி 32 இன்ச் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் மார்ச் 21 ஆம் தேதி அன்று அமேசானில் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமில்லாமல் வங்கி சலுகைகளுடன் வருகிறது.
Redmi Smart Fire TV 32 Inch Price in Tamil:
ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி 32 இன்ச் 13,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு 11,999 ரூபாய்க்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி 32 இன்ச் விவரங்கள்:
ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி 32 இன்ச் Fire OS 7 மூலம் இயங்குகிறது. இவற்றின் டிஸ்பிளே விவிட் பிக்சர் என்ஜின் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட HD அமைப்புடன் வருகிறது. அதுமட்டுமில்லாமல் டிஸ்பிளேவிற்கு அதிக இடத்தை அளித்து படத்தை பெரிதாக காட்டும் வகையில் மெட்டாலிக் பெசல்லெஸ் டிசையுடன் வருகிறது. மேலும் 20W ஸ்பீக்கர்களுடன் வருகிறது.
உங்க தலைமுடியை காய வைக்க ரொம்ப நேரமாகுதா.! அப்போ இதை வாங்கி வச்சுக்கோங்க..! |
சிறப்பம்சங்கள்:
ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி 32 இன்ச் ஆனது உள்ளமைக்கப்பட்ட அலெக்சா அமைப்புடன் வருகிறது.
ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைபையை ஆதரிக்கிறது.
64 பிட் குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயங்குகிறது.
பிரைம் வீடியோ, நெட்பிக்ஸ், அமேசான் மியூசிக், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி போன்ற ஆப்களை ஆதரிக்கிறது.
1 ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் ஏர்பிளே, மிராகாஸ்ட் போன்ற பல அம்சங்களுடன் வருகிறது.
இரண்டு HTMI போர்ட் மற்றும் இரண்டு USB போர்ட் அமைப்பும் உள்ளது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |