இந்தியாவில் Pilot-க்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

Air Pilot Salary in tamil

Air Pilot Salary in tamil

வணக்கம் நண்பர்களே.!  தினந்தோறும் நம் பொதுநலம்.காம் பதிவில் அரசு துறையில் வேலை செய்பவர்களின் சம்பளம் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியாவில் உள்ள விமான ஓட்டுனர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை இப்பதிவில் பார்க்கலாம். அனைவருக்குமே விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுமட்டுமில்லாமல் விமானத்தை பார்க்கும் போது வியப்பாகவும் இருக்கும். விமானத்தை எப்படி ஓட்டுகிறார்கள் என்ற கேள்வி அனைவருக்குமே இருக்கும். அப்படி அந்த விமானத்தை ஓட்டுபவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

விமானம் ஏன் வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கிறது உங்களுக்கு தெரியுமா..

 

Air Pilot Salary in India:

Air Pilot Salary in India in tamil

 இந்தியாவில் ஒரு விமானியின் ஆரம்ப சம்பளம் ஒரு வருடத்திற்கு தோராயமாக 9 லட்சம் முதல் 11.25 லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப்படுகிறது. மேலும் அனுபவமுள்ள மூத்த விமானி 1 கோடி வரை சம்பாதிக்கலாம் என கூறப்படுகிறது.   அதுமட்டுமில்லாமல் ஏர் இந்தியாவின் வழக்கமான பைலட் வருமானம் மாதத்திற்கு தோராயமாக ரூபாய் 16,700 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. பல வருடம் அனுபவத்திற்கு பிறகு ரூபாய் 10.56 லட்சமாக உயரலாம் எனவும் கூறப்படுகிறது. 

விமானியின் சம்பளம் ஆனது, விமானி பணியில் தொடங்கும் முதல் அவர் செய்யும் சாதனை வரை இருக்கலாம். எனவே விமான விமானியின் சம்பளத்தை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. அதாவது விமான நிறுவனம், விமான வகை, பறக்கும் திறம், நற்சான்றிதழ்கள், விமானத்தில் பறக்கும் நேரம் போன்றவற்றை கணக்கிட்டு வழங்கப்படுகிறது.

தொடர்புடைய பதிவுகள்
தமிழ்நாட்டில் கிராம உதவியாளர் (VAO Assistant) சம்பளம் எவ்வளவு தெரியுமா.
தமிழ்நாட்டில் RI சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil