இந்தியாவில் பேங்க் மேனேஜருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Advertisement

இந்தியாவில் பேங்க் மேனேஜருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? | Salary of Bank Manager in Tamil

Bank Manager Salary in Tamil – நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது என்ன என்றால் பேங்க் பேனேஜருக்கு இந்தியாவில் மாதம் எவ்வளவு அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது, என்பதை பற்றி தான். ஆக இந்த பதிவு பேங்க் வேலைவாய்ப்பிற்கு ட்ரை செய்யும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வங்கி மேலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை அறிய இந்த பதிவை பார்க்க வந்தவர்களுக்கும் இந்த பயனுள்ளதாக இருக்கும். சரி இன்றைய பதிவில் வங்கி மேலாளருக்கு இருக்கும் பணிகள் மற்றும் பொறுப்புகள் என்ன மற்றும் அவருக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

வங்கி மேலாளர் என்ன செய்வார்?

  1. வங்கி மேலாளர்கள் ஒரு வங்கியின் குறிப்பிட்ட கிளையை மேற்பார்வையிடுகிறார்கள், அதன் ஊழியர்களை வழிநடத்துகிறார்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்கிறார்.
  2. புதிய பணியாளர்களை பணியமர்த்துதல் மற்றும் பயிற்சி செய்தல்.
  3. விற்பனை இலக்குகளை அடைய உத்திகளை உருவாக்குதல்.
  4. ஊழியர்களின் அன்றாட வேலைகளை நிர்வகித்தல் மற்றும் உதவுதல்.
  5. கிளைக்கான வருடாந்திர செயல்பாட்டு மற்றும் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்.
  6. வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களின் கேள்விகளுக்குப் பதில்களை வழங்குவதற்கும் அவர்களைத் தொடர்புகொள்வது.
  7. வெவ்வேறு நிதி நடவடிக்கைகளுடன் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்துதல்.
  8. டெபாசிட் தகவல், விற்பனை மற்றும் கடன் தரவு, சேவைகள் மற்றும் கருத்து, பிழைகள் மற்றும் வைப்புகளில் உள்ள வேறுபாடுகள் மற்றும் மார்க்கெட்டிங் வெற்றி போன்ற கிளை விவரங்களை ஆவணப்படுத்துதல் மற்றும் உயர் அதிகாரிகளிடம் வழங்குதல். இது போன்று பல பணிகள் அவர்களுக்கு இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பேரூராட்சி பணியாளர்களின் சம்பளம் பட்டியல்கள்…!

Bank Manager Salary in Tamil:

இந்தியாவில் ஒரு வங்கி மேலாளரின் சம்பளம் ₹ 2 லட்சம் முதல் ₹ 15 லட்சம் வரை இருக்கும், சராசரி ஆண்டு சம்பளம் ₹ 7.5 லட்சம் இருக்கும். இருப்பினும், சம்பளம் நிறுவனம் (பொது, தனியார் அல்லது காப்பீடு), இருப்பிடம் மற்றும் தனிநபரின் அனுபவத்தைப் பொறுத்தது.

சரி இப்பொழுது வங்கி மேலாளருக்கு வழங்கப்படும் அடிப்படை மாத சம்பளம் விவரங்களை பற்றி பார்க்கலாம்.

வங்கி மைய மேலாளர் ₹ 25,605/-
உதவி வங்கி மேலாளர் ₹ 42,821/-
வங்கிக் கிளை மேலாளர் ₹ 1,00,000/-
சராசரி ஆண்டு சம்பளம்
₹ 7,00,000/-

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிரதமரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement