Bank of Baroda Manager Salary Per Month in Tamil
இன்றைய சூழலில் அனைத்து இடங்களிலும் போட்டிகள் நிறைந்துள்ளது என்பதால் அனைவரிடமும் ஒரு பொதுவான எண்ணம் உள்ளது. அது என்னவென்றால் நாம் நமது வாழ்க்கையில அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதால் அனைவரிடமும் ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான். அதிலும் குறிப்பாக தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது. மேலும் ஒருசிலருக்கு ஒரு குறிப்பிட்ட துறையில் வேலைக்கு செல்லவேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி பலராலும் இந்த துறையில் கண்டிப்பாக வேலைக்கு சேர என்று விரும்பப்படும் பலதுறைகளில் ஒன்று தான் வங்கி துறை. இப்பொழுது நாம் ஒரு துறையில் வேலைக்கு சேர விரும்புகின்றோம் என்றால் அந்த துறையினை பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள விரும்புவோம். அதுபோல் அந்த துறையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் என்ன தகுதி தேவை மற்றும் அவர்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை பற்றி அறிந்து கொள்ள விரும்புவோம். அதனால் தான் இன்றைய பதிவில் BOB வங்கியில் Manager வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பதை அறிந்து கொள்ள போகின்றோம். சரி வாங்க நண்பர்களே பதிவினில் செல்லலாம்.
IOB வங்கியில் Manager வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா
வங்கி மேலாளரின் பணிகள் என்ன..?
பொதுவாக வங்கி துறையில் வேலைக்கு சேர வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் அனைவருக்குமே வங்கியின் மேலாளர் பணியில் சேர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதேபோல் அவர்களின் பணிகள் என்பதை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் இருக்கும். பொதுவாக வங்கி மேலாளரின் பணிகள்,
- வங்கி மேலாளர்கள் ஒரு வங்கியின் குறிப்பிட்ட கிளையை மேற்பார்வையிடுகிறார்கள், அதன் ஊழியர்களை வழிநடத்துகிறார்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்கிறார்.
- புதிய பணியாளர்களை பணியமர்த்துதல் மற்றும் பயிற்சி செய்தல்.
- விற்பனை இலக்குகளை அடைய உத்திகளை உருவாக்குதல்.
- ஊழியர்களின் அன்றாட வேலைகளை நிர்வகித்தல் மற்றும் உதவுதல்.
- கிளைக்கான வருடாந்திர செயல்பாட்டு மற்றும் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்.
- வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களின் கேள்விகளுக்குப் பதில்களை வழங்குவதற்கும் அவர்களைத் தொடர்புகொள்வது.
போன்ற பணிகளை வங்கி மேலாளர் மேற்கொள்வார்.
சிட்டி யூனியன் பேங்க் Manager வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா
BOB Bank Manager Salary Per Month in Tamil:
பொதுவாக வங்கியில் வேலைக்கு சேரவேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளவர்களுக்கு BOB வங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக BOB வங்கியின் Manager வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அப்படிப்பட்ட ஆசை உள்ளவர்களை அனைவரின் மனத்திலேயும் ஒரு பொதுவான கேள்வி இருக்கும். அதாவது BOB வங்கியின் Manager-க்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என்பது தான்.
உங்களின் மனதில் உள்ள இந்த கேள்விக்கான பதிலை இங்கு காணலாம். BOB வங்கி Manager-ன் மாத சம்பளம் தோராயமாக 68,711 ரூபாய் முதல் 70,474 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இந்த சம்பளமானது அவரவர் அனுபவத்தை பொறுத்து மாறுபடும்.
இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |