கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு இவர்களின் சம்பளம் 2025-ல் எவ்வளவுன்னு தெரியுமா..?

Advertisement

Cricket Umpire Salary 2025 Details in Tamil

இன்றைய சூழலில் எவ்வளவு விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டு மக்கள் மனதில் ஒரு தனி இடம் உள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே கிரிக்கெட் விளையாட்டின் மீது ஒரு தனி நன்மதிப்பும், அன்பும், ஆர்வமும் உள்ளது. இப்படி நமது மனதிற்கு மிகவும் விளையாட்டை விளையாடும் வீரர்கள், பயிற்சியாளர் முதல் அங்கு நடுவர் வேலைபார்க்கும் அம்பயர் என அனைவரையும் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தான் நாம் நினைப்போம். அதனால் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் கிரிக்கெட் விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் பொழுது நடுவர் வேலை பார்க்கும் அம்பயருக்கு எவ்வளவு சமபளம் என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து கிரிக்கெட் விளையாட்டின் நடுவரான அம்பயருக்கு எவ்வளவு சமபளம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா

Cricket Umpire Salary Details Per Match in Tamil:

Cricket Umpire Salary Details in Tamil

பொதுவாக நம்மில் பலருக்கும் கிரிக்கெட் விளையாட்டு என்பது மிக மிக பிடித்த விளையாட்டாகும். அப்படி நமது மனதிற்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் விளையாட்டில் நடுவராக வேலை பார்க்கும் அம்பயருக்கு எவ்வளவு சமபளம் என்பதை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமும் ஆசையும் இருக்கும்.

அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கிரிக்கெட் விளையாட்டில் நடுவராக வேலை பார்க்கும் அம்பயருக்கு எவ்வளவு சமபளம் என்பதை பற்றி இங்கு காணலாம்.

கிரிக்கெட் விளையாட்டில் நடுவராக வேலை பார்க்கும் அம்பயருக்கு ஒவ்வொரு வகையான கிரிக்கெட் விளையாட்டை பொறுத்து மாறுபடும். அதாவது ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டிற்கு நடுவராக உள்ள அம்பயருக்கு வெவ்வேறு அளவிலான சம்பளம் கிடைக்கும்.

Axis பேங்க் Cashier வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா

 

கிரிக்கெட் நடுவர்களின் சம்பள விவரங்கள் அவர்களின் அனுபவம், போட்டியின் வகை மற்றும் அவர்கள் செயல்படும் அமைப்பை பொருத்து மாறுபடும்.

 ஐசிசி (ICC) எலைட் பேனலில் உள்ள நடுவர்கள் ஒரு ஐபிஎல் போட்டிக்கு தோராயமாக  ₹1,98,000 சம்பளம் பெறுகின்றனர். இந்தப் பிரிவில் உள்ளவர்கள் ஒரு போட்டிக்கு தோராயமாக ₹59,000 சம்பளம் பெறுகின்றனர். பேடிஎம் போன்ற ஸ்பான்சர்கள் ஒரு சீசனுக்கு தோராயமாக ₹7,33,000 வரை கூடுதல் வருமானத்தை வழங்குகின்றனர். 

மேலும் இவர்களுக்கு வணிக நோக்கங்களுக்காக முற்றிலும் இலவசமாக உலகம் முழுவதும் பயணம் செய்ய தகுதியுடையவர்கள். இவர்களுக்கு ஆடம்பரமான ஹோட்டல்களில் முற்றிலும் இலவசமாக தங்குகிறார்கள்.

மேலும் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஒரு சிறந்த நடுவரை தேர்வு செய்து அவர்களுக்கு போனஸும் வழங்கப்படுகிறது. அதே போல் இவர்களுக்கு ஆடைகள், உணவுகள் மற்றும் தங்குமிடம் போன்ற ஸ்பான்சர்களிடமிருந்து வெகுமதியாக கிடைக்கும்.

Cricket Umpire qulaifications tamil:

  • கிரிக்கெட் நடுவராக 12-ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும்.
  • கிரிக்கெட் விதிகள்) மற்றும் BCCI/ICC விதிமுறைகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  • DRS, No-ball, LBW, Powerplay போன்ற விதிகளை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.
  • இந்தியாவில் BCCI-யின் கீழ் செயல்படும் மாநில கிரிக்கெட் சங்கம் (TNCA, MCA, KCA, etc.) நடத்தும் Umpire Exam எழுத வேண்டும்.
  • இந்த தேர்வில் எழுத்து (Written Test) மற்றும் நேர்முகத் தேர்வு (Oral Test) அடங்கும்.
  • தேர்ச்சி பெற்றால், மாநில கிரிக்கெட் போட்டிகளில்  நடுவராக பணியாற்றலாம்.

How to Start as a Cricket Umpire?

  1. மாநில கிரிக்கெட் சங்கத்தில் (State Cricket Association) பதிவு செய்யவ வேண்டும்.
  2. Level-1 Umpire தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
  3. மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணி செய்ய வேண்டும்.
  4. BCCI Level-2 Exam எழுதி தேசிய போட்டிகளுக்கு முன்னேற வேண்டும்.
  5. ICC Panel Exam எழுதி சர்வதேச நடுவராக உயரவும்.

சிட்டி யூனியன் பேங்க் Manager வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement