Flipkart Delivery Boy Salary Per Month in India
பொதுவாக மக்கள் தனக்கும், தனது குடும்பத்திற்கும் தேவையான பொருட்களை சென்று வாங்கி வந்த காலங்கள் அனைத்தும் மாறி தற்போது வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே பொருட்களை வாங்கி விடுகிறார்கள். என்ன பொருட்கள் வேண்டுமோ அதனை உடனே ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக வாங்கி வந்து விடுகிறார்கள். இவ்வாறு பொருட்களை வாங்குவதற்கு முன்பாக இத்தகைய ஆன்லைன் நிறுவனம் எப்படி, அதில் வாங்கப்படும் பொருட்கள் திருப்பி வாங்கிக்கொள்ளப்படுமா, பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்குமா என இவற்றை எல்லாம் நன்றாக சிந்தித்தும், ஆலோசனை செய்தும் தான் வாங்குகிறார்கள். அதிலும் ஒரு சிலர் டெலிவரி சார்ஜ் வாங்கும் நபரின் மாத சம்பளம் எவ்வளவு இருக்கும் என்ற அளவிற்கு முழு விவரங்களையும் அலசி ஆராய்ந்து விடுவார்கள். அந்த வகையில் உங்களுக்கும் Flipkart Delivery Boy-யின் மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா..? அப்படி என்றால் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
பிளிப்கார்ட் பாய் மாத சம்பளம் எவ்வளவு..?
பிளிப்கார்ட் நிறுவனம் ஆனது 2007-ஆம் ஆண்டு முதல் முதலில் மும்பையில் தொடங்கப்பட்டது. இவ்வாறு தொடங்கிய அடுத்த ஒரு வருடத்திலேயே அதாவது 2008-ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 100 டெலிவரியினை பெற தொடங்கியது. இன்றைய காலத்தில் ஒரு பெரிய மதிப்பு மற்றும் எண்ணற்ற வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
அந்த வகையில் பிளிப்கார்ட்டில் வேலை செய்யும் டெலிவரி பாய் மாத சம்பளமாக 14,349 ரூபாய் முதல் 15,860 வரை சராசரியாக அளிக்கப்படுகிறது.
மேலும் அனுபவத்தை பொறுத்து மாத சம்பளமாக 17,335 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் வருடாந்திர சம்பளமாக 2,08,018 ரூபாய் தோராயமாக வழங்கப்படுகிறது.
இத்தகைய சம்பளம் என்பது முற்றிலும் தோரயமானது. ஏனென்றால் அனுபவத்தை பொறுத்து இவை மாறுபடும்.
Flipkart Delivery Boy Working Hours in Tamil:
பிளிப்கார்ட்டில் மொத்தமாக ஆர்டர்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பெறப்படுகிறது. ஆனால் டெலிவரி செய்யும் நேரம் என்பது காலை 9 to மாலை 6 மணியாக இருக்கிறது.
ஜொமேட்டோ டெலிவரி பாய் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா
இந்தியன் பேங்க் Chief Manager சம்பளம் எவ்வளவு தெரியுமா
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |