வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அரசு பேருந்து நடத்துனர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Updated On: October 27, 2025 5:21 PM
Follow Us:
government bus conductor salary in tamilnadu in tamil
---Advertisement---
Advertisement

Government Bus Conductor Salary in Tamilnadu 

நாம் அனைவரும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து, வண்டி மற்றும் கார் இது போன்றவற்றை தான் பயன்படுத்துகின்றோம். அதிலும் பெரும்பாலும் நாம் அனைவரும் அரசு பேருந்தில் தான் செல்வோம். இப்படி இருக்கும் அதில் நம்மை கவனமாகவும் பொறுப்பாகவும் அழைத்து செல்ல வேண்டிய பொறுப்பு அந்த பேருந்தில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் பொறுப்பு. இவ்வாறு இருக்கையில் நிறைய நபர்களுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்யும் நடத்துனரின் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கும். அதிலும் குறிப்பாக அவருக்கு என்ன சம்பளம் என்று கூட தெரியாமல் இருக்கும். ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு அந்த வேலையின் மீது இருக்கு. அதனால் தான் இன்று அரசு பேருந்தின் நடத்துனர் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

அரசு பேருந்து நடத்துனர் தகுதி:

அரசு பேருந்து நடத்துனராக மிக குறைந்தபட்சம் 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (குறிப்பிட்ட தேர்வுகள் காலக்கெடுவின்போது அறிவிக்கப்படும்). வணிக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் பெரிய வாகனம் (Heavy Vehicle) ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும். தமிழ்நாடு போக்குவரத்து துறை வழங்கும் கொடை (Badge) வேண்டும்.

வயது வரம்பு மிக குறைந்தபட்சம் 24 வயது முதல் அதிகபட்சம் பொதுப் பிரிவினருக்கு 40 வயது வரை(மாற்றம் இருக்கலாம்). இடஒதுக்கீட்டிற்கு உட்பட்டவர்களுக்கு வயது தளர்வு இருக்கும்.

நல்லபடியான கண் பார்வை இருக்க வேண்டும் (கண்ணாடி & காந்தக் கண்ணாடி அனுமதிக்கப்படாது). உயரம்: குறைந்தபட்சம் 160 செ.மீ. (சில இடங்களில் வயது & உயர தளர்வு இருக்கலாம்).

அரசு பேருந்து நடத்துனர் சம்பளம் | Tamilnadu Bus Conductor Salary:

பேருந்தில் பயணம் செய்யும் போது அனைவரும் கட்டாயமாக பயணச்சீட்டு எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கவில்லை என்றால் நாம் பயணம் செய்ய முடியாது. இப்படி இருக்கையில் நமக்கு சில நேரத்தில் தோன்றும் நாமும் இதுபோல நடத்துனர் வேலைக்கு செல்லலாம் ஆனால் சம்பளம் எவ்வளவாக இருக்கும் என்ற ஒரு குழப்பம் இருக்கும்.

பொதுவாக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கபடுகிறது. 

 இதன் படி பார்க்கும் போது அரசு பேருந்தில் வேலை செய்யும் நடத்துனரின் மாதச் சம்பளம் ₹ 18,500 முதல் ₹ 20,256 வரை வழங்கப்படுகிறது. அதுவே 1 ஆண்டிற்கான சம்பளம்  ஆனது தோராயமாக 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை வழங்கபடுகிறது. 

மேலும் இத்தகைய சம்பளம் ஆனது அனுபவத்தினை பொறுத்து முற்றிலும் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி உயர்வு:

அரசு விரைவு பேருந்து போக்குவரத்தில்  கழகத்தில், நடத்துனர் பரிசோதகர்களாக  உயர்வு பெறுவார்கள்.

சில சந்தர்ப்பங்களில் நடத்துனர் கிளை மேலாளராக உயர்வு பெறுவார்.

டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அதிக வருமானம் ஈட்டுவது சிறந்த செயல்திறன் பதவிக்கு ஊக்கமளிக்கும்.

தொடர்புடைய பதிவுகள் 👇
அரசு பேருந்து ஓட்டுநர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..
ரயில் ஓட்டுனர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது தெரியுமா…
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now