Government College Principal 2025 Salary in Tamil Nadu
மனிதனாக பிறந்த அனைவருக்கும் பிறந்த உடன் எதுவும் தெரிவது இல்லை. நாம் பள்ளி செல்ல ஆரம்பம் செய்த காலத்தில் இருந்து தான் நம்முடைய அறிவு மற்றும் திறன் வளர்ச்சி அடைய செய்கிறது. அதற்கு முக்கிய காரணம் என்றால் ஆசிரியர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து நமது கல்லூரி படிப்பு மற்றும் வாழ்க்கை என்பது நம்முடைய வாழ்க்கையை அடுத்து நிலைக்கு எடுத்து செல்கிறது. இவற்றை எல்லாம் கடந்து வந்த பிறகு அடுத்துக்கட்ட நிலையாக நாம் கட்டாயமாக வேலைக்கு செல்ல வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் சின்ன வயது முதல் உள்ள ஒரு ஆசை என்றால் அது ஆசிரியர் வேலை. இத்தகைய ஆசிரியர் வேலையிலும் பெரும்பாலான மக்கள் அரசு பள்ளி மற்றும் கல்லூரி வேலையினை தான் விரும்புகின்றனர். அந்த வகையில் உங்களுக்கு அரசு கல்லூரி முதல்வர் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதற்கான சம்பளம் எவ்வளவு என்பது பற்றி தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ தமிழ்நாட்டில் DSP-க்கு மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Government College Principal Salary Per Month in Tamil:
முதலில் அரசு கல்லூரியில் உதவி ஆசிரியராக வேலை புரிந்து அதற்கு அடுத்தக்கட்ட நிலையாக தான் கல்லூரி முதல்வர் ஆகின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த வேலைக்கான மாதம் மற்றும் வருடம் சம்பளம் எவ்வளவு என்று பாதி நபர்களுக்கு தெரியவில்லை.
இதனுடைய சம்பளம் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் முற்றிலுமாக வேறுபட்டு தான் காணப்படும். அந்த வகையில் இந்தியாவில் உள்ள கல்லூரி முதல்வர்களுக்கு 7-வது நிதி ஊதியக்குழுவின் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது.
அரசு கல்லூரி முதல்வரின் மாத சம்பளம் தோராயமாக 58,053 ரூபாய் வழங்கப்படுகிறது.மேலும் இவர்களுடைய அனுபவம் என்பது 8 ஆண்டுகளுக்கு மேலாகவும் 31 ஆண்டுகள் வரையிலும் உட்பட்டதாகும். அதுபோல இத்தகைய சம்பளம் முற்றிலும் அனுபவத்தை மையமாகக்கொண்டு 7-வது நிதி ஊதியக்குழுவின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
Government College Principal Qualifications Tamil:
தமிழ்பெண்ட்டில் அரசு கல்லூரிகளில் முதல்வர் பதவிக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
- பிஎச்.டி. (Ph.D.) பட்டம் கட்டாயம்.
- பி.எட். (B.Ed.) அல்லது எம்.எட். (M.Ed.) போன்ற கல்வி துறையில் கூடுதல் தகுதிகள் இருக்க வேண்டும்
- குறைந்தது 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
Government College Principal Promotions:
தமிழ்நாட்டில் அரசு கல்லூரி முதல்வர் பதவி உயர்வுகள் ஆனது தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (UGC) விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறுகின்றன. பொதுவாக, முதல்வர் பதவிக்கு பதவி உயர்வு பெற, ஆசிரியர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதிகள், பணியாற்றிய அனுபவம் மற்றும் நிர்வாக திறன்களை பெற்றிருக்க வேண்டும். மேலும் இவை உங்களின் திறமை மற்றும் பணியாற்றிய திறமை பொறுத்து கொடுக்கபடுகிறது.
இதையும் படியுங்கள்⇒ அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |