Pharmacist Salary 2025 in India
ஒரு காலத்தில் மருத்துவமனைகளில் மற்றும் தான் மெடிக்கல் இருந்தது. ஆனால் இப்பொது அப்படியில்லை ஒரு ஊருக்கு 10 மெடிக்கல் உள்ளது. மருந்துகளின் தேவைகள் அதிகமாவிட்டதால் ஒரு ஊருக்கே பல மெடிக்கல் உள்ளது. நிறைய நபர்கள் மருந்தாளுனர் ஆக வேண்டும் என்பதற்காக விருப்பட்டு படிக்கிறார்கள். இந்த படிப்பை படித்தால் தனியாகவோ அல்லது மருத்துவமனையில் இணைந்தோ மருந்தகம் வைத்து விடலாம். இல்லையென்றால் மருந்தகத்திற்கு வேலைக்கு சென்று விடலாம். நீங்கள் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்தால் எவ்வளவு சம்பளம் என்று அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கும் உதவும் வகையில் இந்த பதவில் மருந்தகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கான சம்பளத்தை தோராயமாக பதிவிட்டுள்ளோம், அதை பற்றி தெரிந்து கொள்ளவும்.
இந்திய அரசின் மருந்தாளுனர் மாத சம்பளம்:
இந்திய அரசாங்கத்தில் மருந்தாளுனர் சம்பளம் தோராயமாக 35,400 ரூபாய் முதல் 1,12,400 ரூபாய் வரை கொடுப்படுகிறது.Pharmacist Technician Salary:
இந்தியாவில் பார்மசி டெக்னீஷியன் மாத சம்பளம் தோராயமாக 21,254 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இந்திய ரயில்வே மருந்தாளுனர் சம்பளம்:
இந்திய ரயில்வேயில் பணிபுரியும் மருந்தாளருக்கு தோராயமாக 25,500 ரூபாய் முதல் 81,100 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
B.pharm Salary in Tamilnadu Per Month:
B.pharm படித்தவர்களுக்கு ஆரம்ப சம்பளமாக 15,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் தோராயமாக வழங்கபடுகிறது. இவர்கள் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பிறகு 25,000 ரூபாய் முதல் 35,000ரூபாய் வரை தோராயமாக வழங்கப்படுகிறது. அதுவே 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பிறகு 35,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
Pharmacist Promotions Tamil:
அனுபவம் அடிப்படையில் Grade-II, Grade-I, Chief Pharmacist ஆகிய நிலைகளுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். மேலும் இவை அரசு வேலையாக இருப்பதால் நிரந்தரமான வேலையாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஓய்வூதியம் கிடைக்கும். ஆண்டுக்கு சுற்றுலா (LTC – Leave Travel Concession) அனுமதி மாத விடுமுறை, மருத்துவ விடுமுறை போன்ற விடுமுறைகள் இருக்கிறது.
| இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |














