IAS அதிகாரியின் சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் | IAS Officer Salary Per Month in India 2024
தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு வணக்கம்.. இந்திய அரசு துறைகளில் மிக மிக முக்கிய பதவியாக அழைக்கப்படுவது IAS பதவி தான். இந்த உயர்பதவி UPSC CSE தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. UPSC CSE தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நபர்களுக்கு சிறப்பு ஊதியங்கள் மற்றும் அடுத்தடுத்த பதவி உயர்வுகளும் வழங்கபடுகிறது, அது குறித்த தகவல்களை பற்றி நாம் இந்த பதிவில் படித்திரியலாம் வாங்க.
IAS அதிகாரியின் மாத சம்பளம் – IAS Officer Salary Per Month in India 2024 | மாவட்ட ஆட்சியர் சம்பளம்:
- ஒவ்வொரு IAS அதிகாரிகளுக்கு 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படும்.
- அதாவது 7 வது சம்பள கமிஷனின் படி, ஒரு IAS அதிகாரியின் அடிப்படை சம்பளம் ரூ. 56100 என கணக்கிடப்பட்டுள்ளது. அதுவே அதிகபட்ச சம்பளம் என்று பார்த்தால் 1,32,000 ரூபாய் ஆகும்.
- இதனுடன் Dearness Allowance, Transport Allowance, House Rent Allowance, Govt. NPS Contribution. Other Allowances என்று அனைத்தும் சேர்த்து ஒவ்வொரு IAS அதிகாரிகளுக்கு முதல் மாத சம்பளம் 1,02,342 ரூபாய் வழங்கப்படும்.
- இந்த சம்பள தொகையில் NPS Deduction-ற்கு 24% கழித்தது போக Net Salary-யாக 88,878 ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
- இந்த Net Salary என்பது IAS அதிகாரி வாங்கும் முதல் மாத சம்பளம் ஆகும். இந்த பணியில் சேவைகளை தொடர தொடர இவர்களுக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு என்று அடுத்தடுத்து தொடரும்.
சம்பளம் வழங்கப்படும் வகை:
- IAS அதிகாரிகளுக்கு Pay Levels என்பது 18 லெவல் இருக்கிறது. இந்த 18 லெவலையும் 1234 என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
- அதேபோல் ஒவ்வொரு வருடமும் IAS அதிகாரிங்கள் சம்பளம் உயர்வு பெரும்பொழுது அதற்கு Index Numbers வழங்கப்படுகிறது. ஆக சம்பளம் உயர்வு பெரும் ஒவ்வொரு வருடமும் Index No 1, 2, 3 என்று தொடர்ந்துகொண்டே போகும்.
- புதியதாக அப்பாயின்மென்ட் பெற IAS அதிகாரிகளுக்கு ஆரம்பத்தில் Pay Levels 10-யில் சம்பளம் வழங்கப்படுகிறது. Pay Levels 10 என்கிறபோது அதற்கு மேல் 09 Levels இருக்கிறது. இந்த 09 Levels-ம் ஒவ்வொரு விதமான ஜூனியர் பதவியில் ஒவ்வொரு விதமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இருப்பார்கள். இதன் காரணமாக தான் புதியதாக அப்பாயின்மென்ட் பெற IAS அதிகாரிகளுக்கு ஆரம்பத்தில் Pay Levels 10-யில் சம்பளம் வழங்கப்படுகிறது. சரி இப்பொழுது Pay Levels 10-யில் இருந்து 18 வரை உள்ள பதவிகள் மற்றும் அதற்கு வழங்கப்படும் ஊதியம் விவரங்களை பார்க்கலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
VAO-வின் சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா?
IAS அதிகாரியின் மாத சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் மற்றும் அதற்க சம்பளம் விவரங்கள்:
IAS அதிகாரியின் மாத சம்பளம் | |||||
ஊதிய நிலை | அடிப்படை ஊதியம் (INR) | பதவிகளுக்கான ஆண்டு காலம் | பதவிகள் | ||
மாவட்ட நிர்வாகம் | மாநில செயலகம் | மத்திய செயலகம் | |||
10 | Rs.56,100/- | 1-4 | Sub-Divisional Magistrate | Undersecretary | Assistant Secretary |
11 | Rs.67,700/- | 5-8 | Additional District Magistrate | Deputy Secretary | Undersecretary |
12 | Rs.78,800/- | 9-12 | District Magistrate | Joint Secretary | Deputy Secretary |
13 | Rs.1,18,500/- | 13-16 | District Magistrate | Special Secretary-cum-Director | Director |
14 | Rs.1,44,200/- | 16-24 | Divisional Commissioner | Secretary-cum-Commissioner | Joint Secretary |
15 | Rs.1,82,200/- | 25-30 | Divisional Commissioner | Principal Secretary | Additional Secretary |
16 | Rs.2,05,400 | 30-33 | Divisional Commissioner | Additional Chief Secretary | No Equivalent Rank |
17 | Rs.2,25,000/- | 34-36 | No Equivalent Rank | Chief Secretary | Secretary |
18 | Rs.2,50,000/- | 37+ years | No Equivalent Rank | No Equivalent Rank | Cabinet Secretary of India |
மேல் அட்டவணையில் கூறியுள்ளது போல IAS அதிகாரிகள் ஒவ்வொரு நிலையை கடந்து வரும்போது அதற்க்கான சம்பளம் உயர்வு மற்றும் பதவி உயர்வு அதிகரிக்கப்படும்.
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |