ICICI Bank Manager Salary Per Month in Tamil
இன்றைய போட்டி நிறைந்த உலகில் நாம் நமது வாழ்க்கையில அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதால் அனைவரிடமும் ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளது. அதிலும் குறிப்பாக தங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது. மேலும் ஒருசிலருக்கு ஒரு குறிப்பிட்ட துறையில் வேலைக்கு செல்லவேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி பலராலும் விரும்பப்படும் ஒரு துறை என்றால் அது வங்கி துறை தான். இதில் வேலைக்கு சேர வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். அதனால் அதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். அதேபோல் நாம் ஒரு துறையில் வேலைக்கு செல்ல இருக்கின்றோம் என்றால் அந்த துறையில் எந்தெந்த பதவிக்கு எவ்வளவு சம்பளம் அளிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புவோம். அதனால் தான் இன்று உங்களுக்கு பயன்படும் வகையில் ICICI வங்கியில் Manager வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பதை அறிந்து கொள்ள போகின்றோம். சரி வாங்க நண்பர்களே பதிவினில் செல்லலாம்.
BOB பேங்க் மேனேஜருக்கு இவ்வளவுதானா சம்பளம்
வங்கி மேலாளரின் பணிகள் என்ன..?
பொதுவாக வங்கி துறையில் வேலைக்கு சேர வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் அனைவருக்குமே வங்கியின் மேலாளர் பணியில் சேர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதேபோல் அவர்களின் பணிகள் என்பதை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் இருக்கும். பொதுவாக வங்கி மேலாளரின் பணிகள்,
- வங்கி மேலாளர்கள் ஒரு வங்கியின் குறிப்பிட்ட கிளையை மேற்பார்வையிடுகிறார்கள், அதன் ஊழியர்களை வழிநடத்துகிறார்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்கிறார்.
- புதிய பணியாளர்களை பணியமர்த்துதல் மற்றும் பயிற்சி செய்தல்.
- விற்பனை இலக்குகளை அடைய உத்திகளை உருவாக்குதல்.
- ஊழியர்களின் அன்றாட வேலைகளை நிர்வகித்தல் மற்றும் உதவுதல்.
- கிளைக்கான வருடாந்திர செயல்பாட்டு மற்றும் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்.
- வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களின் கேள்விகளுக்குப் பதில்களை வழங்குவதற்கும் அவர்களைத் தொடர்புகொள்வது.
போன்ற பணிகளை வங்கி மேலாளர் மேற்கொள்வார்.
IOB வங்கியில் Manager வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா
ICICI Bank Manager Salary Per Month in Tamil:
பொதுவாக வங்கியில் வேலைக்கு சேரவேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ளவர்களுக்கு ICICI வங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக ICICI வங்கியின் Manager வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அப்படிப்பட்ட ஆசை உள்ளவர்களை அனைவரின் மனத்திலேயும் ஒரு பொதுவான கேள்வி இருக்கும். அதாவது ICICI வங்கியின் Manager-க்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என்பது தான்.
உங்களின் மனதில் உள்ள இந்த கேள்விக்கான பதிலை இங்கு காணலாம். ICICI வங்கி Manager-ன் மாத சம்பளம் தோராயமாக 79,283 ரூபாய் முதல் 81,346 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இந்த சம்பளமானது அவரவர் அனுபவத்தை பொறுத்து மாறுபடும்.
SBI வங்கியில் பணிபுரியும் அசிஸ்டன்ட் மேனேஜர் மேனேஜருக்கு சம்பளம் எவ்வளவு
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |