IPS அதிகாரியின் மாத சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

ips officer salary per month in tamil

IPS Officer Promotion And Salary India in Tamil

வணக்கம் நண்பர்களே..! அரசு துறையை சேர்ந்த மிகவும் முக்கியமான வேலைகளில் ஒன்று தான் IPS அதிகாரி வேலை. இந்த IPS பதவியானது UPSC CSE என்ற தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெற்றிருந்த நபர்களுக்கு மட்டும் இந்த பதவி வழங்கப்படுகிறது. இந்த பதவியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம் மற்றும் அடுத்தடுத்த பதவிகள் என்னென்ன என்பதை பற்றி இன்றைய பதிவில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். இந்த பதிவானது IPS ஆக வேண்டும் என்று கனவுகளோடு இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பதிவை படித்து விரிவாக தெரிந்துகொள்ளாம் வாருங்கள் நண்பர்களே..!

IPS Officer Salary Per Month India in Tamil:

IPS பதவியில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் மாதாந்திர சம்பளம் வழங்கப்படுகிறது.

மேலும் 7வது ஊதியக்குழுவின் படி Basic Salary ரூ. 56,100 என ஒவ்வொரு IPS அதிகாரிகளுக்கும் கணக்கிட படுகிறது.

இத்தகைய சம்பளத்துடன் Dearness Allowance (DA), House Rent Allowance (HRA), Transport Allowance (TA) இவை அனைத்தையும் சேர்த்து மொத்தமாக ரூ. 64,000 மாத சம்பளமாக IPS அதிகாரிகளுக்கு கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த தொகையில் Deduction, PF, ESI இவை அனைத்திற்கும் சேர்த்து ரூ. 10,000 பிடிக்கப்பட்டு Net Salary ரூ. 54,000 IPS அதிகாரிகளுக்கு மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

மேலே கொடுப்பட்டுள்ள அனைத்தும் நீங்கள் முதல் முதலில் IPS அதிகாரி பொறுப்பிற்கு வந்தவுடன் வழங்கப்படும் மாதாந்திர சம்பளம். அதன் பிறகு நீங்கள் செய்யும் சேவையை பொறுத்த உங்களின் மாதாந்திர சம்பளம் வேறுபடும்.

IPS அதிகாரியின் அடுத்தடுத்த உயர் பதவிகள் | IPS Officer Promotion India in Tamil

அடிப்படை ஊதியம்IPS தரவரிசைடெல்லி காவல்துறையில் பதவி
Rs. 56,100Deputy Superintendent of PoliceAssistant Commissioner of Police
Rs. 67,700Assistant Superintendent of PoliceAdditional Deputy Commissioner of Police
Rs. 78,800Senior Superintendent of PoliceDeputy Commissioner of Police
Rs. 1,31,100Deputy Inspector General of PoliceAdditional Commissioner of Police
Rs. 1,44,200Inspector General of PoliceJoint Commissioner of Police

 

மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது போல் ஒவ்வொரு IPS அதிகாரியும் அவர் அவரின் நிலையை கடந்து வரும் போது அதற்கு சம்பள உயர்வு மற்றும் பணி உயர்வு வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்⇒ IAS அதிகாரியின் மாத சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉Salary and Promotion Details in Tamil