அரசு சிவில் பொறியாளர்களின் (JDO) சம்பளம் எவ்வளவு தெரியுமா…? | JDO Salary in Tamilnadu

Advertisement

JDO salary | JDO Meaning in Tamil Salary

வணக்கம் நண்பர்களே..! அரசு துறையை சேர்ந்த மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்று தான் தமிழ்நாடு பொறியியல் துணை சேவைகள் துறை. இந்த துறையின் பதவிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் மூலம் எடுக்கப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் துணை சேவைகள் துறையில் ஒரு பிரிவாக இருப்பது JDO ( Junior Draughting Officer). இந்த பதவியானது TNPSC JDO  என்ற தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெற்றிருந்த நபர்களுக்கு மட்டும் இந்த பதவி வழங்கப்படுகிறது.

இந்த பதவியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம் மற்றும் அடுத்தடுத்த பதவிகள் என்னென்ன என்பதை பற்றி இன்றைய பதிவில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். இந்த பதிவானது சிவில் படிப்பு படித்து பொறியியல் துறையில் சாதிக்க வேண்டும் என்று கனவுகளோடு இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பதிவை படித்து விரிவாக தெரிந்துகொள்ளாம் வாருங்கள் நண்பர்களே..!

JDO Full Form Salary:

JDO என்பதன் விரிவாக்கம் Junior Draughting Officer என்பதாகும்.

JDO Salary Per Month TamilNadu in Tamil:

jdo salary in tamilnadu in tamil

  • JDO பதவியில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் 11 நிலை படி அடிப்படையில் மாதாந்திர சம்பளம் வழங்கப்படுகிறது.
  • மேலும் 11 நிலைப்படி படி மூலம் அவர்களின் அடிப்படை மாத சம்பளம்  ரூ. 35,400 என ஒவ்வொரு JDO அதிகாரிகளுக்கும் கணக்கிட படுகிறது. 
  • இத்தகைய சம்பளத்துடன் Dearness Allowance (DA), House Rent Allowance (HRA), Transport Allowance (TA) இவை அனைத்தையும் சேர்த்து மொத்தமாக மாத சம்பளமாக DRO அதிகாரிகளுக்கு கணக்கிடப்பட்டுள்ளது.
  •  அந்த தொகையில் Deduction, PF, ESI இவை அனைத்தும் பிடிக்கப்பட்டு Net Salary ரூ. 35,400 முதல் ரூ.1,12, 400 வரை JDO அதிகாரிகளுக்கு மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. 
  • மேலே கொடுப்பட்டுள்ள அனைத்தும் நீங்கள் முதல் முதலில் JDO அதிகாரி பொறுப்பிற்கு வந்தவுடன் வழங்கப்படும் மாதாந்திர சம்பளம். அதன் பிறகு நீங்கள் செய்யும் சேவையை பொறுத்த உங்களின் மாதாந்திர சம்பளம் வேறுபடும்.
  • தமிழ்நாட்டில் ஒரு ஜே.டி.ஓ-வின் சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை உள்ளது. இது மாத சம்பளம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதுவே ஒரு வருடம் என்று எடுத்துக்கொண்டால் ரூ. 4.24 லட்சம் முதல் ரூ.13.48 லட்சம் வரை வழங்கப்படும். சம்பள அளவுகோல், சலுகைகள் மற்றும் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த சம்பளம் வழங்கப்படும்.

JDO Promotion in Tamilnadu:

ஜூனியர் டிராஃப்டிங் அதிகாரிகள் (JDO) ஜூனியர் பொறியாளர்கள் அல்லது உதவி பொறியாளர்களாக (Junior Engineers or Assistant Engineers) ஆக பதவி உயர்வு பெறலாம்.

வன துறை அதிகாரியின் மாத சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

 

Advertisement