RI Salary in Tamilnadu
வணக்கம் நண்பர்களே. இவ்வுலகில் உள்ள பெரும்பாலானோருக்கு அரசு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஏனென்றால் அரசு வேலை என்பது ஒரு உயர்ந்த பதவி. அதுமட்டுமில்லாமல் அரசு வேலைகளில்தான் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் அரசு வேலைக்கு முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள். எனவே பெரும்பாலும் சம்பளத்தை அடிப்படையாக கொண்டே அரசு வேலைக்கு செல்கிறார்கள். அப்படி அரசு பணியாளர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை தினமும் நம் பொதுநலம்.காம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தமிழ்நாட்டில் தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரியும் RI அவர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தமிழ்நாட்டில் RI சம்பளம் எவ்வளவு.?
தமிழ்நாட்டில் வருவாய் துறையில் பணிபுரியும் RI அவர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் தோராயமாக 31,840 ரூபாய் முதல் 33,127 ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் 2 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ள ஊழியர்களுக்கு தோராயமாக ஒரு வருடத்திற்கு ரூ.4,28,750 ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
RI அவர்களின் பணி என்ன.?
கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம பணியாளர்களின் பணிகளை மேற்பார்வை இடுதல்.
ஆறுகள் மற்றும் அரசின் புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக கல், மணல் போன்றவற்றை எடுக்கின்றனவா என்று கண்காணித்தல்.
பட்டா நிலங்களை சரிபார்த்தல்.
புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை தணிக்கை செய்தல்.
நலத்திட்டங்கள் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்களை சரிபார்த்தல்.
வரி வசூல் காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகள் அடங்கும்.
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |