தமிழ்நாடு அரசு பணியாளர்களின் சம்பளம் பட்டியல்கள்..!

Advertisement

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் | Salary of Govt Employees in Tamil

Salary of Govt Employees in Tamil – நண்பர்களுக்கு வணக்கம். இன்றிய பதிவில் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், துறைகள், நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் ஆரம்ப சம்பளம் மற்றும் சம்பளம் உயர்வு பற்றிய விஷயங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.. மேலும் VAO, IAS, IPS அதிகாரிகளின் சம்பளம் மற்றும் அடுத்தடுத்த பதவி உயர்வு பற்றி விவரங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉Salary and Promotion Details in Tamil 👈 சரி வாங்க இப்பொழுது தமிழ்நாடு அரசு பணியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தூய்மை பணியாளர்கள்:

தமிழ்நாடு அரசின் Level 1-யில் மிக குறைந்த ஊதியத்தில் அப்பாயின்மென்ட் பண்ணுவது யார் என்றால் இந்த தூய்மை பணியாளர்களை தான். இவர்களை அப்பாயின்மென்ட் செய்து ஆரம்ப சம்பளமாக 15,700/- ரூபாய் + Allowance-வுடன் வழங்கப்படும். இவர்கள் 30 வருடம் சேவையை பெறும்போது 50,000/- சம்பளம் வழங்கப்படும். மேலும் Allowance-வுடன் சேர்க்கும்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக சம்பளம் வழங்கப்படும். இவர்களை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என்றால் பேரூராட்சியிலேயே நேரடியாக அவர்களுக்கு தேவையான ஆட்களை தூய்மை பணியாளர்களாக தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அதேபோல் இந்த பணியில் Temporary-யாக பணியாற்றுபவர்களுக்கு இருக்கின்றன. அவர்களுக்கு சம்பளம் என்பது ரொம்ப குறைவான சம்பளம் தான் இருக்கும்.

அலுவலக உதவியாளர் – Office Assistant:

நாம் ஏதாவது அரசு அலுவலகங்களுக்கு செல்லும் போது நாம் முதலில் காண்பது அலுவலக உதவியாளராக தான் இருக்கும். இந்த அலுவலக உதவியாளருக்கு Level 1 அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களை அப்பாயின்மென்ட் செய்து ஆரம்ப சம்பளமாக 15,700/- ரூபாய் + Allowance-வுடன் வழங்கப்படும். இவர்கள் 30 வருடம் சேவையை பெறும்போது 50,000/- சம்பளம் வழங்கப்படும். மேலும் Allowance-வுடன் சேர்க்கும்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக சம்பளம் வழங்கப்படும். இவர்களை எப்படி தேர்ந்தெடுப்பாங்க அப்படின்னா அந்தந்த துறைகளில் உள்ளவர்கள் அவரக்ளுக்கு தேவையான அலுவலக உதவியாளர்களை தேர்வு செய்துகொள்வார்கள்.

VAO, ட்ரைவர், ஜூனியர் அசிஸ்டன்ட்:

VAO, ட்ரைவர், ஜூனியர் அசிஸ்டன்ட் இந்த பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அதாவது (TNPSC) தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு கல்வி தகுதி என்ன அப்படின்னா 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் சில நேரங்களில் ட்ரைவர் பணிகளுக்கு அந்தந்த துறைகளே நேரடியாக தேவைப்படும் ஆட்களை தேர்வு செய்துகொள்வார்கள். இவர்கள் அனைவருக்குமே Level 8-யின் அடிப்படியில் சம்பளம் வழங்கப்படும். இவர்கள் அப்பாயின்மென்ட் செய்யப்பட்டு ஆரம்ப சம்பளமாக ரூ.19,500/- + Allowance-ம் வழங்கப்படும். இவர்களது 55-வது வயதில் 55,000/- + Allowance-வுடன் 68000 வரை சம்பளம் வாங்குவார்கள்.

ஆனால் இவற்றில் VAO, ஜூனியர் அசிஸ்டன்ட் இவர்களுக்கெல்லாம் இவர்கள் ஆற்றிய சேவைகளை பொறுத்து அடுத்தடுத்த உயர்வு இருக்கிறது. ஆக அந்த பதவி உயர்வை பெற விரும்புபவர்கள் துறைசார்ந்த தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற வேண்டும். அந்த பதவி உயர்வை பெரும் பொழுது அவர்களது சம்பளமும் மாறுபடும்.

அசிஸ்டன்ட்:

அரசு அலுவலகங்களில் உள்ள பதவியான அசிஸ்டன்ட் பதவி எப்படி தேர்வு செய்யபடுகிறது என்றால். TNPSC தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்படி இல்லையென்றால் ஜூனியர் அசிஸ்டன்டாக இருந்து துறை சார்ந்த தேர்வுகள் மூலமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த அசிஸ்டன்ட் பதவி வழங்கப்படுகிறது. இதற்கான கல்வி தகுதி என்னவென்றால் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். TNPSC Group 2A தேர்வில் நீங்கள் தேர்ச்சியானால் இந்த அசிஸ்டன்ட் பதவிக்கு வர முடியும். அஅப்படி தேர்வில் தேர்ச்சி பெற்று அப்பாயின்மென்ட் வாங்கிய பிறகு ஆரம்ப சம்பளமாக 20,600 ரூபாய் ஊதியத்துடன் + Allowance-ம் வழங்கப்படும். இவர்களது 30 வருட சேவைக்கு பிறகு 65,500/- ரூபாய் ஊதியம் = Allowance-ம் வழங்கப்படும். இவர்களுக்கு சமயம் என்பது Level-10 அடிப்படையில் வழங்கப்படும்.

 

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement