பிரதமரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Advertisement

இந்திய பிரதமர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Salary of Prime Minister of India

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. நமது வலைப்பதிவில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் அதிகாரிகளின் சம்பளம் விவரங்களை பற்றி பதிவு செய்து வருகிறோம். அந்த வகையிலுருந்து நாம் இந்திய பிரதமரின் மாதம் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்தியப் பிரதமர் அல்லது இந்தியத் தலைமை அமைச்சர் என்பவர் இந்திய அரசின் செயலாக்கத் தலைவர் ஆவார். இவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் தலைமை ஆலோசகரும் மத்திய அமைச்சரவையின் தலைவரும் ஆவார். இந்தியாவில் பிரதமர் பதவி என்பது மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமராக நரேந்திர மோடி பதவியில் உள்ளார். இவருடைய சம்பளம் விவரத்தை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
VAO-வின் சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா?

Salary of Prime Minister of India:

ஆண்டு சம்பளம் ரூ.19,20,000/-
மாத சம்பளம் ரூ.1,60,000/-
வார சம்பளம் ரூ.36,923,08/-
தினசரி  ரூ.7,384,62/-

 

இந்தியப் பிரதமரின்  அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.160,000 அடங்கும். மேலும் பிரதமரின் ஆண்டு வருமானம் 19.92 லட்சம் ஆகும். அவரது அடிப்படை சம்பளம் ரூ.50,000 ஆகும். இது தவிர சப்ச்சுவரி அலவன்ஸ்கள் ரூ.3000, எம்.பி அலவன்ஸ் ரூ.45,000, தினசரி அலவன்ஸ் ரூ.62,000, போக்குவரத்து, வீட்டு வசதி மற்றும் சுகாதார வசதிகள். மேலும், இந்திய அரசாங்கம் இவருக்கு டெல்லியில் வழங்கும் ஒரு குடியிருப்பு, IAF விமானிகளுடன் போயிங் 777-300ERs விமானம், போக்குவரத்து, சிறப்பு பாதுகாப்பு மற்றும் சுகாதார காப்பீடு ஆகியவற்றை வழங்குகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
IAS அதிகாரியின் மாத சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement