SSC CGL Excise இன்ஸ்பெக்டரின் பணிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது தெரியுமா..!

Advertisement

SSC CGL – Excise Inspector பணிக்கு இந்தியாவில் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது..!

Salary of Excise Inspector in Tamil – ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் SSC CGL-யில் உள்ள Excise Inspector பணிக்கு இந்தியாவில் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறித்து படித்தறியலாம்.

SSC CGL Excise Inspector என்பது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறையில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) கீழ் உள்ள குரூப் ‘பி’ பதவியாகும். துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழிற்சாலைகளின் உற்பத்தி வெளியீடுகள் போன்றவற்றின் மீது சரக்குகளுக்கு விதிக்கப்படும் வரியை CBIC கட்டுப்படுத்துகிறது. CBIC இல் உள்ள ஒரு கலால் ஆய்வாளர் (Excise Inspector) சிறப்புத் திறன்கள் தேவைப்படும் சக்திவாய்ந்த மற்றும் மதிப்புமிக்க வேலைகளில் ஒன்றாகும். எனவே, இது SSC CGL இன் கீழ் பிரபலமான பதவி ஆகும். இந்த கலால் ஆய்வாளர் பணியாளர் பணி SSC Combined Graduate Level Exam மூலம் அதாவது SSC CGL தேர்வு மூலம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு SSC தேர்வாணையம் சோர்வு செய்யும் பணியாகும். சரி இந்த SSC CGL Excise Inspector-க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டில் DSP-க்கு மாதம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

SSC CGL  எக்சைஸ் இன்ஸ்பெக்டரின் சம்பளம் – Salary of Excise Inspector in Tamil:

SSC CGL இன்ஸ்பெக்டர் (எக்சைஸ்) என்பது INR 4600 தர ஊதியத்துடன் கூடிய பதவியாகும், மேலும் SSC CGL கலால் ஆய்வாளரின் சம்பள கட்டமைப்பின் விவரத்தை கீழே காணலாம். ஆட்சேர்ப்பு நடைபெறும் இடத்திற்கு ஏற்ப SSC CGL இன்-ஹேண்ட் சம்பளம் மாறுபடும். எஸ்எஸ்சி சிஜிஎல் எக்சைஸ் இன்ஸ்பெக்டரின் தோராயமான மாதாந்திர சம்பளம் பின்வருமாறு.

எஸ்எஸ்சி சிஜிஎல் எக்சைஸ் இன்ஸ்பெக்டரின் தோராயமான அடிப்படை சம்பளம் ரூ.44,900 ஆகும். தோராயமாக அவர்களுக்கு வழங்கப்படும் அளவன்ட்ஸ் அனைத்தையும் சேர்த்து மாதாந்திர சம்பளம் ரூ.58,426 – 68,866 வழங்கப்படும். இவர்களுக்கு 7th பே கமிஷன் அடிப்படியில் ஊதியம் வழங்கப்படுகிறது.

உயர் பதவிகள்:

SSC CGL Excise Inspector பதவிக்கு அடுத்தடுத்த உயர் பதவிகளுக்கும் வழங்கப்படுகிறது அவை Superintendent அதன் பிறகு, Assistant Commissioner அதன் பிறகு Deputy Commissioner, அதன் பிறகு Joint Commissioner, அதன் பிறகு Commissioner என்று இவர்களுக்கு அடுத்தடுத்த உயர் பதவிகளும் வழங்கப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தமிழ்நாட்டில் சப்-இன்ஸ்பெக்டரின் (SI) மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement