வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Road Inspector Salary எவ்வளவு தெரியுமா?

Updated On: September 27, 2025 11:51 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Road Inspector Salary in Tamil Nadu  2025

இன்றைய பதிவில் ரோடு ஆய்வாளர் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி பார்க்க போகிறோம். இவ்வுலகில் உள்ள பெரும்பாலானோருக்கு அரசு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஏனென்றால் அரசு வேலை என்பது ஒரு உயர்ந்த பதவி. அதுமட்டுமில்லாமல் அரசு வேலைகளில்தான் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் அரசு வேலைக்கு முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள். எனவே பெரும்பாலும் சம்பளத்தை அடிப்படையாக கொண்டே அரசு வேலைக்கு செல்கிறார்கள். அப்படி அரசு பணியாளர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை தினமும் நம் பொதுநலம்.காம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தமிழ்நாட்டில் ரோடு ஆய்வாளர் அவர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தமிழ்நாட்டில் Road inspector சம்பளம் எவ்வளவு?

TNPSC Road Inspector அவர்களின்  சம்பளம்  மாத சம்பளம் தோராயமாக Rs.19,500/- முதல் Rs.71,900/- வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதில் வீடு வாடகை , மருத்துவ நிதி அரசு வழங்கும் சலுகை மற்றும் வருங்கால வைப்பு நிதி, வருமான வரி, தொழில்முறை ஆகியவற்றை சேர்த்த பிறகு மாதம்  கையிருப்பு சம்பளம் Rs.42,000/- முதல் Rs.47,000/- வரை இருக்கும்.

பதவி உயர்வு :

பதவி உயர்வு பொறுத்த வரையில் ஒரு சாலை ஆய்வாளர் ஜூனியர் இன்ஜினியர்,உதவி இன்ஜினியர் மற்றும் நிர்வாக பொறியாளர் போன்ற பதவி உயர்வுகள் பெறலாம். இதில் அவர் எவ்வளவு காலம் பணியாற்றுகிறார் மற்றும் துறை சார்ந்த தேர்வுகளில் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறார். அவர்களின் ஒட்டுமொத்த பணி செயல்திறனை பொறுத்து பதவி உயர்வு அளிக்கபடுகிறது. மேலும், ஒரு சாலை ஆய்வாளர் 5-7 ஆண்டுகளுக்கு பிறகு ஜூனியர் ட்ராஃட்டிங் அதிகாரியாக பணியாற்ற முடியும். 

தகுதி:

  • இந்த பணிக்கு10th pass மற்றும் டிகிரி, டிப்ளமோ ஏதாவது ஒரு படிப்பை  படித்திருக்க வேண்டும். போதுமான அளவு தமிழ் அறிவை பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த பணிக்கு  அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் சிவில் ட்ராஃப்ட்ஸ்மேன்ஷிப்பில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  •  வயது குறைந்தபட்சம்  21 வயது முதல் அதிகபட்சம்  37 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
  • இந்த பணிக்கு எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அரசு சிவில் பொறியாளர்களின் (JDO) சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

Road Inspector பணிகள் :

  • அனைத்து பொருள்களையும் ஆய்வு செய்து தரமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யவும்.
  • அனைத்து சாலைகளும் பிட்டமினஸ் நடைப்பதையுடன் மறு சீரமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  • புதிய பாலங்கள் மற்றும் சாலைகள் அமைப்பு  திட்டத்தை மேற்படுத்தி கட்டுமான தரத்தை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
  • கிராமப்புறங்களில் இருக்கும் சாலைகள் மற்றும் பாலங்களில் ஏற்படும் சேதங்களை ஆய்வு செய்து சீரமைத்து தருதல்.
  • சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான கணக்கெடுப்புகளை மேற்கொண்டு மேல் அதிகாரியிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

Road Inspector சலுகைகள்:

  • மருத்துவ வசதி 
  • ஓய்வூதியம் 
  • சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள் 
  • அரசு விடுதி 
  • பதவி அதிகரிப்பு மற்றும் ஊக்கதொகை 
  • போனஸ் 

Retirement Benefits:

  •  அரசு வேலை என்பதால் வேலை என்பது நிரந்தரமான வேலையாக இருக்கிறது.
  • பணி ஓய்வுக்கு பிறகு நிதியில் எந்த பிரச்சனையும் இருக்காது.
  • நீங்கள் பணியை ஓய்வு பெறும் போது ஒரு மொத்த தொகை கிடைக்கும்.

Leave Benefits:

ஆண்டுக்கு குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை எடுத்து கொள்ளும் வசதி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டாலும் அதில் விடுமுறை எடுத்து கொள்ளலாம்.

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now