தமிழ்நாட்டில் கிராம உதவியாளர் (VAO Assistant) சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Tamilnadu Village Assistant Salary Details

Tamilnadu Village Assistant Salary Details

வணக்கம் நண்பர்களே.! பொதுவாக அனைவருக்குமே அரசு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கும். சிலர் அரசு வேலை கிடைத்தால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று அரசு வேலைகளை நோக்கி ஓடி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகப்படியான அரசு வேலைகள் உள்ளன. அதிலும் கிராம உதவியாளர் வேலைக்கு நிறைய பேர் ஆர்வத்துடன் இருக்கின்றனர். எனவே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தமிழ்நாட்டில் அரசு கிராம உதவியாளர் மாதம் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்..?  அவருக்கு சம்பள உயர்வு எவ்வளவு..? போன்ற விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

VAO Assistant Salary 2023 Tamil Nadu:

தமிழ்நாடு வருவாய் துறையானது கிராம உதவியாளர் வேலைவாய்ப்பினை வழங்குகிறது. இந்த வேலையின் முக்கிய அம்சம் சம்பளம் தான். சம்பளத்தை அடிப்படையாக கொண்டே அதிகமானோர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் என்பதால் இந்த வேலைக்கு  போட்டிகள் அதிகமாக இருக்கின்றது.

தமிழ்நாட்டில் தாசில்தார்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

2023 கிராம உதவியாளர் (VAO Assitant) சம்பளம்:

 தமிழ்நாட்டில் கிராம உதவியாளருக்கு 2023 ல் வழங்கப்படும் மாத சம்பளம் தோராயமாக 11,100 ரூபாய் முதல் 35,100 ரூபாய் வரை வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், வேலையின் அனுபவத்திற்கு ஏற்றவாறு சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

Village Assistant Work in Tamil:

கிராமங்களில் உள்ள நன்செய் நிலங்கள், புன்செய் நிலங்கள், தரிசு நிலங்கள், நத்தம் புறம்போக்கு நிலங்கள் போன்றவற்றின் புள்ளி விவரங்களை தெரிந்து வைத்து, அதில் உள்ள பிரச்சனைகளை சரி செய்தல்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.

 

மேலும் கிராமங்களில் என்னென்ன வகையான பயிர்கள் விளைவிக்கின்றனர்..? நிலவரி எவ்வளவு கட்டுகிறார்கள்.? போன்ற விவரங்களை தெரிந்துகொண்டு உயர் அதிகாரிக்கு தெரிவித்தல்.

அதுமட்டுமில்லாமல், பிறப்பு இறப்பு சான்றிதழ், முதியோர் ஓய்வூதிய சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவை கேட்டு வருபவர்களின் வீடுகளுக்கு சென்று சான்றிதழில் உள்ள விவரங்கள் அனைத்தும் உண்மைதானா என்று பார்த்து உயர் அதிகாரியான VAO அவர்களிடம் கூற வேண்டும்.

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉