VAO பணிக்கான விவரங்கள் | VAO Salary and Promotion Details in Tamil
ஹாய் நண்பர்களே.. வணக்கம் இன்றைய பதிவில் கண்டிப்பாக அரசு பொது தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்பும் மற்றும் அரசு பணிகளுக்கான விவரங்களை தெரிந்துகொள்ள நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் நமது ஊரில் இருக்கும் VAO-விற்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும், அவர்களுக்கான வயது வரம்பு என்ன, அவர்களுக்கான கல்வி தகுதி என்ன, VAO-விற்கு அடுத்து அவர்களுக்கு என்னென்ன பதவிகள் வழங்கப்படும் போன்ற கிராம நிர்வாக அதிகாரி VAO பணி குறித்த விவரங்களை படித்தறியலாம் வாங்க.
VAO-விற்கு என்ன கல்வி தகுதி?
TNPSC-யின் VAO-க்கான தேர்விற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? அதாவது SSLC தேர்வில் தேர்ச்சி பெறாத விண்ணப்பதாரர்கள் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெறாத விண்ணப்பதாரர்கள் வேறு எதாவது ஒன்றில் அதிக தகுதி பெற்றிருந்தாலும் இந்த VAO தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக இருக்க முடியாதாம்.
அதேபோல் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் எழுத மற்றும் சரளமாக படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- SC, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and DWs விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 21 முதல் 40 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும்.
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு 21 ஆண்டுகள் முதல் 30 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
VAO Salary and Promotion Details in Tamil
சம்பளம் விவரம்:
VAO Salary Details in Tamil | |
VAO வின் ஊதிய அளவு | பே பேண்ட்-1 இன் படி 5200-20,200/-INR + 2,400 |
அடிப்படை ஊதியம் | 5,200/-INR |
முதல் மாத சம்பளம் | 18,000-19,000/-INR |
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு பதவி உயர்வு உள்ளதா? | VAO Promotion Details in Tamil
TNPSC தேர்வுகள் மூலம் அரசாங்கத்தால் கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணிக்கு தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு கண்டிப்பாக பதவி உயர்வு உண்டு. கிராம நிர்வாக அலுவலர் பணியில் 6 வருடன் சேவை பெற்ற பிறகு வருவாய் துறையில் உதவியாளராக (Revenue Village Assistant) பதவி உயர்வு பெறுவார்கள்.
அதன் பிறகு வருவாய் ஆய்வாளர் (Revenue Inspector), துணை தாசில்தார் (Deputy Tahsildar), தாசில்தார் (Tahsildar), மாவட்டாட்சியார் (District Collector) என்று உங்கள் அனுபவம் மற்றும் பணிமூப்பு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்தடுத்த பதவி உயர்வுகள் தொடர்கிறது. ஆனால் இந்த பதவி உயர்வுகளை அடுத்தடுத்து பெற வேண்டும் என்றால் துறை சார்ந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
IAS அதிகாரியின் மாத சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன தெரியுமா?
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |