ஊராட்சி மன்ற தலைவர் சம்பளம் – Village Panchayat President Salary in Tamilnadu
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது தமிழ்நாட்டில் தற்பொழுது மொத்தமாக 12,618 ஊராட்சிகள் உள்ளது. இந்த கிராம ஊராட்சிகளில் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தான் நேரடியாக தினமும் மக்களுடன் தொடர்பில் உள்ளவர்கள். கிராமப்புறங்களில் உள்ள அடிப்படை பிரச்சனைகளான குடிநீர் வசதி, சுகாதாரம், கிராம சாலைகள், தெருவிளக்குகள், கழிவுநீர் நிர்வாகம். போன்றவற்றை கிராம ஊராட்சி அமைப்புகள் தான் நிர்வகிக்கின்றன. இதுமட்டுமின்றி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளினால் கிராமப்புற மக்களுக்கான திட்டங்களை முறையாக கொண்டு சேர்ப்பதும் ஊராட்சி மனற தலைவர்களின் பணியாக உள்ளது.
பொதுவாகவே ஊராட்சி மன்ற தலைவர்கள் தினமும் தங்களின் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர். மேலும், ஊராட்சிகளில் உள்ள பிரச்சனைகளை ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளையும் செய்கின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம் எவ்வளவு என்று இப்பொழுது இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
ஊராட்சி மன்ற தலைவர் சம்பளம் – Village Panchayat President Salary in Tamilnadu:
- இந்த கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு மாதம் சம்பளம் Rs.3000/- முதல் Rs.6000/- வரை ரூபாய் வழங்கபடுகிறது.
- கிராமத்தின் அளவு மக்கள் தொகை மற்றும் பிற உள்ளூர் காரணிகளை பொறுத்து இந்த தொகை மாறுபடலாம்.
பதவியின் முக்கிய பொறுப்புகள்:
- ஊராட்சியின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல்.
- மக்களிடம் இருந்து கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு அவற்றை அரசு மானியங்களின் மூலம் நிறைவேற்றுதல்.
- உள்ளூர் குடிமக்களுக்காக சுகாதாரம், கல்வி, குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை சேவைகளை மேம்படுத்துதல்.
- ஊராட்சி மன்ற கூட்டங்களை நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்துதல்.
தேர்வு முறை:
- ஊராட்சி மன்ற தலைவர் நேரடி தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்படுகிறார். அவரது பதவிக்காலம் பொதுவாக 5 ஆண்டுகள் ஆகும்.
- இவர் ஒரு கிராமத்தின் முன்னணித் தலைவர் என்பதால், மக்களின் நலனை முன்னிலையில் கொண்டு செயல்படுவதே அவரது முக்கியக் கடமையாகும்.
ஊராட்சி மன்ற தலைவராக அடிப்படை தகுதிகள்:
- வயது தகுதி: குறைந்தபட்சம் 21 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.
- வாக்காளர் பதிவு: தேர்ந்தெடுக்கப்படும் கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.
தகுதி நீக்கம் செய்யும் காரணங்கள்:
- ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படக் காரணங்கள் முறைகேடுகள், ஊழியர் கொடுமை, பணியின்மை.
- சட்டத்தால் தடை செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலைமைகள் இருந்தால், அந்த நபர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
ஊராட்சி மன்ற தலைவரின் முக்கிய பொறுப்புகள் :
- தெருவிளக்கு அமைத்தல்
- ஊர் சாலைகள் மேற்பார்வையிடுதல்
- குடிநீர் வசதி சீராக இருப்பதை உறுதி செய்தல்
- கழிவுநீர் கால்வாய் அமைத்தல்
- சிறிய பாலங்கள் அமைத்தல்
- தொகுப்பு வீடுகள் கட்டுதல்
- கிராமங்களில் நூலக வசதியை ஏற்படுத்தி தருதல்
| இதன் தொடர்புடைய பதிவுகளை தெரிந்துகொள்ள கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇👇 |
| அங்கன்வாடி ஆசிரியர் சம்பளம் |
| அரசு பேருந்து ஓட்டுநர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? |
| சத்துணவு பணியாளர் சம்பளம் எவ்வளவு..! |
| பேரூராட்சி பணியாளர்களின் சம்பளம் பட்டியல்கள்…! |
| இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |














