Zomato Delivery Boy Salary in Tamil
ஜொமேட்டோ நிறுவனம் தன்னை சார்ந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்வதற்கு ஊழியர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த ஊழியருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது. டெலிவரி பாயாக பணிபுரிவது சிறந்த வேலையா, ஜொமெட்டோவில் பணிபுரிய என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் போன்ற விவரங்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.
ஜொமேட்டோ எப்படி வேலைக்கு சேர்வது?
Delivery Partner of Zomato என்று Google-யில் Search செய்தீர்கள் என்றால் ஒரு வெப் பேஜ் திறக்கப்படும். அந்த வெப் பேஜில் நீங்கள் Application Download செய்து உங்கள் டாக்குமெண்டை உள்ளீட்டால் உங்களுக்கு ஒரு ஐடி கிடைத்துவிடும். அல்லது உங்கள் நண்பர் யாராவது Zomato-யில் பணிபுரிந்தால், அவர்களை சிபாரிசு செய்ய சொல்லலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்தியாவில் பேங்க் மேனேஜருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
தேவைப்படும் ஆவணங்கள்:
- ஆதார் கார்டு
- பேன் கார்டு
- பாஸ் புக்
- டிரைவிங் லைசன்ஸ்
- பைக்
- பைக்கின் RC புக்
- பைக் இன்சூரன்ஸ் இந்த அனைத்து ஆவணங்களும் தேவைப்படும்.
Order Earning:
Zomato-யில் ஒரு ஆர்டருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
பொதுவாக 6 கிலோ மீட்டருக்கு மேல் சென்றோம் என்றால் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 4.50 கொடுப்பார்கள்.
Order Ready Time Pay என்றால் நீங்கள் ரெஸ்ட்டாரண்ட் சென்று விட்டீர்கள், இருந்தாலும் அங்கு இன்னும் உணவு தயார் செய்யவில்லை என்றால் நீங்கள் காத்திருக்கும் 3 நிமிடங்களுக்கு ஒவ்வொரு முறை உங்களுக்கு 1 ரூபாய் கிடைக்கும்.
அதேபோல் நீங்கள் ஒரு ஆர்டர் எடுத்தால் அதற்கு 15 ரூபாய் கிடைக்கும். ஆக இது தான் ஒரு ஆர்டருக்கான Pay ஆகும்.
மேலும் ஒவ்வொரு நாளும் Target என்பது டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு இருக்கும். அந்த Target-ஐ முடித்தால் அதற்கான தொகையும் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்கப்படுமாம்.
அதேபோல் Weekly Target என்பதும் இருக்கும். இந்த Weekly Target என்றால் அவற்றில் நீங்கள் 36 மணி நேரம் Login-யில் இருக்க வேண்டும். வேண்டுமென்றால் உங்களால டெலிவரி செய்யமுடியாத நிலையில் ஒரு ஆர்டரை கேன்சல் செய்துகொள்ளலாம். இந்த 36 மணி நேரத்தை நீங்கள் மதியம் 12 to 03 மற்றும் மாலை 06 to 10.59 வரை நீங்கள் டெலிவரி செய்திருக்க வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிரதமரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சம்பளம் விவரத்தை பார்க்கலாம்:
Zomato-யில் தினமும் டெலிவரி செய்ததில் 400 ரூபாயும், வாரம் Target முடிக்கும் போது உங்களுக்கு 3000 ரூபாய் சம்பளம் கிடைக்கும். இந்த தொகையை மொத்தமாக வாரத்தில் ஒருமுறை தான் உங்கள் அக்கவுண்டில் செலுத்துவார்கள். ஆக தோராயமாக உங்களுக்கு மாதம் 15,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும். டெலிவரி செய்யும் போது உங்களுக்கு ஏதாவது டிப்ஸ் கிடைக்கும். அதுவும் தினமும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மேலும் நீங்கள் தான் பெட்ரோல் செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்குமாம். இது ஆரம்பகால சம்பளம் தான், உங்களுடைய Experience அதிகமாகும் போது வேண்டுமானால் உங்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கலாம்.
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |