நீங்க பேசும் போது யாரோ ஒருவர் பேசுவது போல வருகிறதா. அது என்னனு தெரியுமா.?

Advertisement

Call Forwarding New Scam in Tamil | கால் பார்வேர்டிங் ஸ்கேம்

தொழில்நுட்பம் வளர்வது ஒரு புறம் நன்மை இருந்தாலும் மறுபுறம் தீமையும் இருக்கிறது. மனிதன் தங்களது அறிவை வளர்த்து கொண்டாலும் சில நபர்கள் சில மோசடிகளில் விழுந்து விடுகிறார்கள். தினமும் மோசடிகளை பற்றிய செய்திகளை படிக்கிறோம், பார்க்கிறோம், ஏன் சொல்லப்போனால் உங்களது நண்பர்களோ, உறவினர்களோ மோசடிகளில் பாதிக்கப்பட்டிருக்கலாம். நாம் என்ன தான் கவனமாக இருந்தாலும் ஈசியாக மோசடியில் மாட்டி கொள்கிறோம். சைபர் மோசடிகள் பெருகிவரும் காலத்தில், நம்மை ஏமாற்ற சைபர் கிரிமினல்கள் புதுப்புது வழிகளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். சாதாரண மக்களை குறிவைத்து, அவர்களின் பணத்தை கொள்ளையடிக்க பல யுக்திகளை பயன்படுத்துகிறார்கள். முன்பு நம்ம நேரடியாக கால் செய்து பணம் வேண்டும் என்று மிரட்டினார்கள். ஆனால் இப்போது மொபைல் போனை வைத்தே நம்மை ஏமாற்றும் காலம் வந்துவிட்டது. அதில் ஒன்றான மோசடியை பற்றி தான் பார்க்க போகிறோம் வாங்க..

How to Identify Call Forwarding:

கால் பார்வேர்டிங் ஸ்கேம்

நீங்கள் உறவினர்களிடமோ அல்லது நண்பர்களுடனோ பேசி கொண்டிருக்கும் போது வேறு யாரோ பேசுவது திடீரென்று கேட்கும். அப்படி கேட்கும் போது நீங்கள் டவர் பிரச்சனை என்று நினைப்பீர்கள். ஆனால் இவை சில நேரங்களில் இவை மோசடியாக இருக்க நேரிடும். ஏனென்றால் சைபர் கிரைம்கள் call forwarding என்ற அம்சத்தை பயன்படுத்தி நம்மை மோசடி செய்கிறார்கள். அதாவது நமக்கு வரும் முக்கியமான அழைப்புகளை நம்மை ஏமாற்ற நினைக்கும் நபர்களின் எண்ணுக்கு திருப்பிவிட்டு அவர்கள் நம்மை எளிதாக ஏமாற்றி விடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் உங்களை ஏமாற்றும் விதமாக பேசுவார்கள். வங்கியில் இருந்து பேசுவது போலவோ, பெரிய நிறுவனங்களிருந்து பேசுவது போலவோ உங்களிடம் பேசி OTP- களை கேட்கலாம். இந்த OTP மூலம் உங்களது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து விடுவார்கள். பயப்பட வேண்டாம் உங்களுக்கு ஒரு டிப்ஸ் சொல்கிறேன். உங்களது போனில் பின் Call Forwarding செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு *#21# என்று டைப் செய்து கால் செய்ய வேண்டும்.

ATM-யில் ஸ்கேம் ஜாக்கிரதை..

Call செய்த பிறகு கால் ஃபார்வர்டிங் ஆக்டிவ் ஆக இருந்தால் அதனை பற்றிய விபரம் கீழே வரும். அப்படி எந்த எண்ணும் காட்டவில்லை என்றால் No Service Activated என்று வரும். அப்படி வேறு ஏதாவது நம்பர் காட்டினால், உங்கள் போன் ஃபார்வர்டிங் செய்யப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.

How to Disable Call Forwarding:

ஒருவேளை Call forwarding செய்பட்டிருந்தால் அதனை நிறுத்த முடியும். அதற்கு நீங்கள் ##002# என்று டைப் செய்து கால் பட்டனை பிரஸ் செய்ய வேண்டும். இதன் மூலம் call forwarding ஆகியிருந்தால் Disable ஆகிவிடும்.

ஆகையால் உங்களுக்கு தெரியாத லிங்கோ அல்லது Message-யோ வந்தால் அதனை கிளிக் செய்யாதீர்கள். மிகுந்த பாதுகாப்புடன் மொபைலை கையாளுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 Link 
Advertisement