கொரோனா கால் ஸ்கேம்

Advertisement

Covid Vaccine Feedback Calls Scam 

இரண்டு வருடத்திற்கு முன் கொரோனா வைரசால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டார்கள். பலரும் இறந்தும் விட்டார்கள். இந்த வைரஸிலிருந்து நம்மை தற்காத்து கொள்வதற்கு Covaxin, Covishield ஊசி போட சொன்னார்கள். இந்த தடுப்பூசிகளை இரண்டு முறை போட்டு கொண்டோம். இப்போ என்ன அதற்கு அது தான் முடிந்துவிட்டதே என்ற கேள்வி புரிகிறது. இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்றது போல் மோசடிகளும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. எவ்வளவு தான் தொழிநுட்ப்பம் வளருகிறதோ அந்த அளவுக்கு ,மோசடிகள் நடப்பதை தடுக்க முடியாது. ஆனால் நாம் அதனை பாதுகாப்பாக கையாண்டால் மோசடிகளிருந்து தப்பிக்கலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் மோசடி என்ன அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

கொரோனோ ஸ்கேம்:

கொரோனா ஸ்கேம்

மோசடிகள் பல விதமாக நடக்கிறது. அதில் ஒன்று கால், மற்றொன்று மெசேஜ், லிங்க் மூலமாக மோசடிகள் நடந்து கொண்டே இருக்கிறது. அதிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைத்து கொள்வது அவசியமானது.

உங்களுக்கு தெரிந்த நம்பரிலிருந்து கால் வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே தெரியாத நம்பரிலிருந்து கால் வந்தால் அதனை கவனமாக கையாள வேண்டும். உங்களுக்கு தெரியாத நம்பரிலிருந்து கால் வந்து அதில் நீங்கள் கொரோனோ தடுப்பூசி எடுத்துளீர்களா என்று என்றால் 1-ஐ அழுத்தவும், இல்லயென்றால் 2-ஐ அழுத்த வேண்டும் என்ற விருப்பம் கேட்கும். 

நீங்கள் இந்த விருப்பங்களை தேர்வு செய்தால் உங்களுடைய மொபைல் செயலிழந்து விடும். மேலும் உங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். அதனால் இந்த மாதிரி கால் வந்தால் அதனை கட் செய்து விட வேண்டும். இந்த மாதிரியான கேள்விகளுக்கு பதில் கொடுக்காதீர்கள். இந்த Call-யை தவிர்த்து உங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.

இந்த பதிவை உங்களின் நண்பர்கள், மற்றும் உறவினர்களுக்கு  ஷேர் செய்யுங்கள். இதன் மூலம் அவர்களையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வேறொரு பதிவில் உங்களை சந்திக்கின்றேன் நன்றி வணக்கம்.!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link
Advertisement