பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போஸ்ட் ஆபீசில் 10,000 ரூபாய் கட்டினால் எவ்வளவு அசல் கிடைக்கும்..?

Advertisement

10000 FD for 5 Years in Post Office

பிக்சட் டெபாசிட் திட்டம் என்பது நாம் அனைவரும் அதிகமாக கேள்விப்பட்டிருக்க கூடிய ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். இப்படிப்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் நிறைய நபர்களுக்கு பணத்தினை சேமிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக போஸ்ட் ஆபீஸில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேமித்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற சிந்தனையும் உள்ளது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஏனென்றால் இந்த திட்டத்திற்கான தகுதி, இதர தகவல்கள் அனைத்தும் தெரியாமல் இருப்பதே இதற்கான அடிப்படை காரணமாகும். அதனால் இன்று போஸ்ட் ஆபீசில் உள்ள பிக்ஸ்ட் டெபாசிட் திட்டத்தினை பற்றிய அனைத்து தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

போஸ்ட் ஆபீஸ் பிக்ஸட் டெபாசிட்:

பிக்சட் டெபாசிட் திட்டம் ஆனது போஸ்ட் ஆபீஸ் மற்றும் இதர வங்கிகள் என அனைத்திலும் உள்ளது. ஆனால் மற்றவையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது போஸ்ட் ஆபீசில் தான் வட்டி விகிதம் அதிகமாக வழங்கப்படுகிறது.

வயது தளர்வு  குறைந்தப்பட்ச சேமிப்பு தொகை  அதிகப்பட்ச சேமிப்பு தொகை  வட்டி விகிதம் 
18 வயது பூர்த்தி அடைந்த ஆண் மற்றும் பெண்கள். ரூ. 1,000 வரம்பு எதுவும் கிடையாது. 6.80% முதல் 7.50% வரை

வட்டி விகிதம்:

இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் என்பது 6.80% முதல் 7.50% வரை மொத்தமாக இருந்தாலும் முதிர்வு காலத்தினை பொறுத்து பிரித்து அளிக்கப்படுகிறது.

  • 1 வருடம்-  6.80%
  • 2 வருடம்-  6.90%
  • 3 வருடம்- 7.00%
  • 5 வருடம்-  7.50%

New Schemes👉👉 தபால் துறையில் மாதந்தோறும் 6167 ரூபாய் வருமானம் தரும் திட்டம்

டெபாசிட் காலம்:

தபால் துறையில் உள்ள இந்த திட்டத்தினை பொறுத்தவரை 1, 2, 3 மற்றும் 5 என நான்கு வகையான டெப்பாசிட் காலங்கள் உள்ளது. இதில் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக:

போஸ்ட் ஆபீசில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ஒரு நபர் மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு 10,000 ரூபாயினை சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் தொகை எவ்வளவு..?

டெபாசிட் தொகை: 10,000 ரூபாய் 

வட்டி விகிதம்: 7.50%

முதிர்வு காலம்: 5 வருடம் 

மொத்த வட்டி தொகை: 4,499 ரூபாய் 

மொத்த அசல் தொகை: 14,499 ரூபாய் 

New Schemes👉👉 செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement