2 Lakh Fixed Deposit Interest in Canara Bank in Tamil
நாம் அனைவருக்குமே சேமிப்பு என்பது மிகவும் முக்கியம் என்று தெரியும். இருந்தாலும் சம்பாதிக்கும் பணம் எல்லாம் அன்றாட தேவைக்கே சரியாக இருக்கிறது என்று நிறைய பேர் சொல்லி கேட்டிருப்போம். அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படியாவது ஒரு தொகையினை சேமித்து வைக்கவே வேண்டும் என்பதற்காக ஓடி கொண்டிருக்கிறோம். எனவே எதிர்கால தேவைக்காக பணத்தை சேமித்து வைத்தால் மட்டும் போதாது.. சேமித்த பணத்தை எதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் வங்கியில் உள்ள சேமிப்பு திட்டங்களில் தான் முதலீடு செய்வார்கள். எனவே நீங்கள் கனரா வங்கி வாடிக்கையாளராக இருந்தால் FD திட்டத்தில் 2 லட்சம் டெபாசிட் செய்தால் முதிர்வு காலத்தில் எவ்வளவு தொகை பெறலாம் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..
5 வருடத்திற்கு வட்டியாக மட்டுமே 1,28,624/- அளிக்கும் அசத்தலான திட்டம்
Canara Bank FD Interest Rates List 2023:
கால அளவு | General Citizen | Senior Citizen |
7 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு | 4% | 4% |
46 நாட்கள் முதல் 90 நாட்களுக்கு | 5.25% | 5.25% |
91 நாட்கள் முதல் 179 நாட்களுக்கு | 5.50% | 5.50% |
180 நாட்கள் முதல் 269 நாட்களுக்கு | 6.25% | 6.75% |
270 நாட்கள் முதல் 1 வருடம் வரை | 6.50% | 7% |
1 வருடம் மட்டும் | 7% | 7.50% |
444 நாட்கள் | 7.25% | 7.75% |
1 வருடம் முதல் 2 வருடம் வரை | 6.90% | 7.40% |
2 வருடம் முதல் 3 வருடம் வரை | 6.85% | 7.35% |
3 வருடம் முதல் 5 வருடம் வரை | 6.80% | 7.30% |
5 வருடம் முதல் 10 வருடம் வரை | 6.70% | 7.20% |
1 லட்சம் செலுத்தினால் Canara வங்கியில் 1,09,826 ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டம்..!
2 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டித்தொகை கிடைக்கும்..?
எனவே நீங்கள் ஒரு General Citizen ஆக இருந்து கனரா வங்கியில் 5 வருட கால அளவில் 2 லட்சம் டெபாசிட் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு 6.70% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
எனவே 6.70% வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும் போது 5 வருடத்திற்கும் சேர்த்து 78,813 ரூபாய் உங்களுக்கு வட்டி தொகையாக கிடைக்கும். அதாவது, நீங்கள் டெபாசிட் செய்த 2 லட்சம் ரூபாயை சேர்த்து மொத்தமாக 2,78,813 ரூபாயினை பெறுவீர்கள்.
அதே நீங்கள் ஒரு Senior Citizen ஆக இருந்து கனரா வங்கியில் 5 வருட கால அளவில் 2 லட்சம் டெபாசிட் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு 7.20% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
எனவே 7.20% வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும் போது 5 வருடத்திற்கும் சேர்த்து 85,750 ரூபாய் உங்களுக்கு வட்டி தொகையாக கிடைக்கும். அதாவது, நீங்கள் டெபாசிட் செய்த 2 லட்சம் ரூபாயை சேர்த்து மொத்தமாக 2,85,750 ரூபாயினை பெறுவீர்கள்.
1 லட்சத்திற்கு 400 நாட்களுக்கு வட்டி மட்டுமே 38,042 ரூபாய் இந்தியன் வங்கியின் FD திட்டத்தில் ……
5 லட்சம் தொழில் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா..?
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |