விவசாயிகள் வாங்கும் இயந்திரத்திற்கு 60 சதவீதம் மானியம்..!

Advertisement

வேளாண் இயந்திரங்கள் மானியத் திட்டம் | Agriculture Subsidy Scheme in Tamilnadu

அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்து வருகிறது. அதனை பற்றி  Pothunalam.com பதிவில் படித்து அறிந்திருப்பீர்கள். அதேபோல் இன்று விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் இயந்திரம் வாங்கும் திட்டத்திற்கும் அரசு மானியம் வழங்குகிறது. அதை எப்படி அப்ளை செய்வது யாருக்கு நன்மை என்று இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!

வேளாண் விளை பொருட்கள் மதிப்பு கூட்டும் இயந்திரம் வழங்கும் திட்டம்:

இந்த திட்டத்தில் நோக்கம் என்னவென்றால் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் இந்த லாபம் அவர்களுக்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் ஒரு இயந்திரம் வாங்குகிறார்கள் என்றால் அவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு Agri பட்ஜெட்டில் இந்த திட்டத்தில் ஒதுக்கீடு செய்தது. அதாவது 292 இயந்திரங்களுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

அது எந்த இயந்திரம் என்பதை பார்க்கலாம்:

  • பருப்பு உடைத்தல் இயந்திரம்
  • தானியம் அரைத்தல்
  • மாவு அரைத்தல்
  • கால்நடை தீவனம் அரைத்தல்
  • சிறிய வகை நெல் அரவை இயந்திரம்
  • நெல் உமி நீக்குதல் இயந்திரம்
  • கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்குதல் இயந்திரம்
  • தேங்காய் மட்டை உரித்தல் இயந்திரம்
  • செடியிலிருந்து நில கடலையை பிரித்து எடுத்தல்
  • நில கடலை தோல் உரித்து தரம் பிரித்தல்
  • மிளகாய் அரவை
  • செக்கு இயந்திரம்
  • பாக்கு உடைத்தல் இயந்திரம்
  • பருத்தி பறித்தல்
  • தேயிலை பறித்தல்
  • வெங்காய தோலை உரித்தல் மேலும் மதிப்புக்கூட்டும் இயந்திரத்திற்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.

இந்த இயந்திரத்திற்கு மட்டும் 40 சதவீதம் மட்டுமில்லாமல் நீங்கள் ஆதிதிராவிட பழங்குடியினர், சிறு, குறு விவசாயியாக இருந்தால் உங்களுக்கு தமிழக அரசு கூடுதலாக 20 சதவீதம் அதாவது, 60 சதவீதம் மானியம் வழங்குகிறது.

இப்போது அனைவருக்கும் கவலை என்னவென்றால் 60 சதவீதம் மானியம் நீங்கள் தருகிறீர்கள். மீதம் இருக்கும் பணத்திற்கு நாங்கள் எங்கு செல்வது என்று நினைப்பீர்கள். அதற்கு தான் இன்னொரு திட்டம் உள்ளது. Agriculture Infrastructure Fund. இந்த திட்டமானது மத்திய அரசு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் லோன் வாங்கி கொள்ளமுடியும். இதற்கு வெறும் 3 சதவீதம் தான் வட்டி.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்👉👉👉   பம்பு செட்டு அமைப்பதற்கு 90% மானியம் வழங்கப்படுகிறது.! யாரெல்லாம் பயன் அடையலாம்

ஆகவே விவசாயிகள் அனைவருமே முடிந்த அளவு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மற்ற இடத்திற்கு எடுத்து சென்று அங்கு பாதி காசு கொடுக்காமல், வேளாண் மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை வாங்கி தானாகவே அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு மதிப்பு கூட்டி விவசாயிகள் இதன் மூலம் லாபம் பார்க்க வேண்டும்.

இந்த திட்டத்தை எப்படி அப்ளை செய்வது என்றால், உழவன் ஆப் இருக்கும்.  அதில் இந்த திட்டத்தை தெரிந்துகொண்டு அதன் மூலம் நீங்கள் அப்ளை செய்யலாம். https://aed.tn.gov/ என்ற இணைய தளத்தின் மூலமும் அப்ளை செய்யலாம்.

தேவையான ஆவணம்:

  • ஆதார் கார்டு
  • புகைப்படம்
  • வங்கி கணக்கு புத்தகம்
  • நீங்கள் தனிப்பட்ட விவசாயாக இருந்தால் நிலத்தின் ஆவணம்

இதை எங்கு சென்று கொடுக்கவேண்டும் என்று கேட்பீர்கள்:

உங்கள் தாலுக்கா ஆபிஸில் அங்கு உள்ள Agriculture அலுவலகம் சென்று உதவி செயற்பொறியாளரை பார்க்க வேண்டும்.

விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் வழங்கும் மத்திய அரசின் திட்டம்

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement