அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது..! Amma Cement Supply Scheme..!
Amma Cement Online Registration: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் புதிதாக வீடு கட்ட துவங்குபவர்களுக்கு ஒன்றரை லட்சம் செலவினை குறைக்கும் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். இந்த திட்டம் சிலருக்கு தெரிய வாய்ப்பு உள்ளது. சிலருக்கு தெரியாமல் கூட இருக்கும். இந்த திட்டத்தினை பற்றி தெரிந்த சிலருக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி தெரியவில்லை. இந்த பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். வீடு கட்டும் ஒவ்வொருவரும் சிமெண்ட் செலவிற்கான 1 1/2 லட்சம் ரூபாயை குறைக்கும் வகையில் இந்த திட்டம் உள்ளது. சரி இப்போது விரிவாக அம்மா சிமெண்ட் திட்டத்தினை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் 2020..! ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி? |
அம்மா சிமெண்ட் விலை மதிப்பு:
அம்மா சிமெண்ட் ஒரு மூட்டையின் விலை மதிப்பானது ரூ.190/-. சாதாரணமான சிமெண்ட் மூட்டையின் விலையின் அளவை விட இந்த அம்மா சிமெண்ட் திட்டத்தில் ஒரு மூட்டைக்கு ரூ.210/- குறைவாக இருக்கிறது.
2 வகை திட்டம்:
இந்த அம்மா சிமெண்ட் திட்டத்தில் 2 வகையாக சிமெண்ட் வழங்கி வருகிறார்கள். முதலில் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கும், பழைய வீட்டினை புதுப்பிப்பதற்கும் தனி தனியாக சிமெண்ட் கொடுக்கிறார்கள்.
புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு குறைந்தபட்சம் 750 மூட்டை கணக்கிற்கு சிமெண்ட் கொடுக்கிறார்கள். பழைய வீட்டினை புதிப்பிப்பதற்கு குறைந்தப்பட்சம் 100 கணக்கிலான சிமெண்ட் மூட்டை வழங்குகிறார்கள்.
கணக்கீடு:
அம்மா சிமெண்ட் திட்ட கணக்கின் படி புதிய வீட்டிற்கு 100 சதுர அடி என்ற அளவில் 50 சிமெண்ட் மூட்டைகள் கொடுக்கப்படுகிறது. 1500 சதுர அடி அளவிற்கு 750 மூட்டை சிமெண்ட் கொடுக்கிறார்கள்.
தேவையான ஆவணம்:
இந்த அம்மா சிமெண்ட் திட்டத்தின் மூலம் சிமெண்ட் வாங்குவதற்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்.
அடுத்து கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் இணைக்க வேண்டும்.
அடுத்ததாக தங்களின் உறுதிமொழி சான்றிதழ் எழுதி இணைக்க வேண்டும். இந்த கிராம அலுவலகர் சான்றிதழ் பழைய வீட்டினை புதுப்பிப்பதற்கு அந்த சான்றிதழ் இணைக்க வேண்டும். Plan Approval சான்றிதழ் புதிதாக வீடு கட்டுபவர்கள் இணைக்க வேண்டும்.
புதிதாக வீடு கட்டுபவர்கள் கண்டிப்பாக Plan Approval வைத்திருந்தால் மட்டுமே அம்மா சிமெண்ட் திட்டத்தில் சிமெண்ட் வாங்க முடியும்.
தரம்:
அனைத்து சிமெண்ட் தரத்தினை போலவே அம்மா சிமெண்ட் தரமும் இருக்கிறது. பலரின் மனதில் இருக்கும் சந்தேகம் அம்மா சிமெண்ட் தரமாக இருக்குமா என்ற கேள்வி இயல்பானது தான்.
அனைத்து கட்டு வேலை, கான்கிரிட் போன்ற வேலைகளுக்கு தாராளமாய் பயன்படுத்தலாம்.
விண்ணப்பிப்பது எப்படி:
அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முதலில் உங்களுடைய மொபைலில் கூகுள் ஆப்ஷனில் “amma cement” என்று டைப் செய்யவும். பிறகு கீழே “amma cement login” என்பதை க்ளிக் செய்யவும்.
அடுத்து இந்த பக்கத்தில் “பயனாளிகள் தாங்களே முன்பதிவு செய்ய” என்பதை கிளிக் செய்யவும்.
இவற்றில் Benefitiary name என்ற இடத்தில் உங்களுடைய பெயர், தொலைபேசி எண், email id இருப்பவர்கள் email id கொடுக்கலாம். இல்லாதவர்கள் தவிர்த்துக்கொள்ளலாம்.
அடுத்து வலது பக்கத்தில் scheme என்ற ஆப்ஷனில் “General Public Repairs” அல்லது “New house” என்பதை கிளிக் செய்யவும். “General Public Repairs” கொடுத்தால் VAO சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
அடுத்து ரேஷன் எண், ID Proof இடத்தில் ஆதார் கார்டு செலக்ட் செய்யவும். Id No என்ற இடத்தில் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். அடுத்தாக Bags Required என்பதில் தாங்களுக்கு எத்தனை சிமெண்ட் மூட்டைகள் தேவைப்படுகிறதோ அந்த எண்ணை உள்ளிடவும்.
அடுத்து நீங்கள் இருக்கும் சரியான மாவட்டத்தினை District என்ற இடத்தில் குறிப்பிட வேண்டும். அடுத்து உங்களுடைய ஊரில் குடோன்(Godown) அமைந்திருக்கும் இடத்தினை சரியாக குறிக்க வேண்டும்.
அடுத்ததாக விண்ணப்பிப்பதற்கு முகவரியை குறிப்பிட வேண்டும். கடையாக கீழே Next என்ற ஆப்ஷனை கொடுத்தால் நீங்கள் குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் வரும். அதனை பிழைகள் இல்லாமல் ஒருமுறை திருத்தம் செய்துக்கொள்ளவும்.
விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்றால் கீழே Submit ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.
submit ஆப்ஷனை கொடுத்த பிறகு “Your Registration Is Successful” என்ற மெசேஜ் உங்களுடைய மொபைலுக்கு வரும். மெசேஜ் வரவில்லை என்றால் இந்த எண்ணை எழுதி வைத்துக்கொள்ளவும்.
சிமெண்ட் வாங்கும் குடோனில் வந்த மெசேஜ் எண்ணை கட்டாயமாக கேட்பார்கள். குடோனில் இருந்து உங்களுக்கு கால் வரும். கால் வரவில்லை என்றால் நீங்கள் எடுத்து செல்ல வேண்டியது மெசேஜ் எண், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, உறுதிமொழி விண்ணப்பம், கிராம அலுவலர் சான்றிதழ் அல்லது Plan Approval சான்றிதழ் எடுத்துச்செல்ல வேண்டும்.
தொகை:
நீங்கள் வாங்கப்போகும் சிமெண்ட் மூட்டைக்கான தொகையினை போகும்போது எடுத்து செல்லவேண்டும். குடோனில் செல்லான்(challan) ஒன்று கொடுப்பார்கள். அந்த challan-ஐ எடுத்து போய் இந்தியன் வங்கியில் பணத்தினை செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய பிறகு வங்கியில் reference நம்பர் கொடுப்பார்கள். அந்த எண்ணை சிமெண்ட் குடோனில் கொடுத்தால் தேவையான சிமெண்ட் மூட்டைகள் தங்களுக்கு கொடுக்கப்படும். வீடு கட்டுபவர்களுக்கு 1 1/2 லட்சம் சேமிக்கக்கூடிய சிறப்பான திட்டம். அனைவருக்கும் பகிர்ந்து நீங்களும் பயனடைய வாழ்த்துக்கள்..!
7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..! |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |