வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அம்மா இரு சக்கர வாகனம் திட்டம்..! Amma Two Wheeler Scheme..!

Updated On: October 8, 2021 11:02 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

அம்மா இரு சக்கர வாகனத்தின் புதிய திட்டம்..! Amma Two Wheeler Scheme 2021 In Tamil..!

Amma Two Wheeler Scheme 2021 In Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அம்மா இரு சக்கர வாகனத்தின் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை பற்றித்தான் முழுமையாக இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். அம்மா இருசக்கர வாகனத்தின் புதிய மாற்று திட்டம் 29 நவம்பர் 2019 அன்றில் இருந்து கொண்டுவரப்பட்டது தான் இந்த புதிய திட்டம். சரி வாங்க நண்பர்களே இந்த புதிய திட்டத்தை பற்றிய விவரங்களை விரிவாக படித்து தெரிந்துகொள்ளுவோம்..!

new7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!

Amma Two Wheeler Scheme 2021 In Tamil

திட்டம் அறிவித்த ஆண்டு:

அம்மா இருசக்கர வாகன திட்டம் 2016 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு ஜனவரி 2019 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை நடைமுறையில் உள்ளது.

திட்ட மானியம்:

இந்த திட்டத்தில் பயனாளர்கள் ஏற்கனவே வாகனம் வைத்திருந்தாலும் மானியம் பெறலாம். அடுத்து புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கும் இந்த திட்டத்தில் மானியம் வழங்கப்படும்.

இதில் மானியம் 50% அல்லது ரூ.25,000/- தொகை வழங்கப்படும். உதாரணத்திற்கு ரூ.75,000/- இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு அம்மா வாகன திட்டத்தில் ரூ. 25,000/- மானியம் கொடுக்கப்படும்.

ரூ.50,000/-ற்குள் வாகனம் பெறுபவர்களுக்கு அதில் 50% மானியம் வழங்கப்படும்.

யார் விண்ணப்பிக்கலாம்:

இந்த அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஆண்கள் பெயரில் விண்ணப்பிக்க முடியாது.

குறிப்பு:

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்கள் பெயரில் தான் வாகனம் எடுக்க முடியும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண் தமிழ்நாட்டில் வசித்து, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

வயது தகுதி:

இரு சக்கர வாகன திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்ணிற்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம்:

இந்த திட்டம் மூலமாக வாகனம் பெற அந்த பெண்ணிற்கு ஆண்டு வருமானமானது ரூ. 2.5 லட்சத்திற்கு கீழே இருக்க வேண்டும். வேலையில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

வாகன ரகம்:

அடுத்து இந்த திட்டத்தில் வாகனம் ஒன்றை தேர்வு செய்கிறீர்கள் என்றால் அந்த வாகனத்தின் இன்ஜின் 125cc (Engine Capacity) அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். அந்த அளவிற்கு மேல் வாகனம் எடுப்பவர்களுக்கு வாகனத்தின் மானியம் கிடைக்காது.

அம்மா வாகன திட்டத்தின் முன்னுரிமைகள்:

குடும்பத்தில் தலைவியாக இருந்தால் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

அடுத்ததாக ஊனமுற்றோர், திருநங்கை போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

newஅனைவருக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்..! மாதம் 500 முதலீடு செய்தால் 11,39,663 கிடைக்கும்..!

புதிய திருத்தம்:

பழைய திட்டத்தில் வாகனம் பெற 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இப்போது இந்த புதிய திட்டம் மாற்றத்தில் 8 ஆம் வகுப்பு வந்திருந்தால் போதும். அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வாகனம் எடுப்பதற்கு தேவையான ஆவணம்:

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தேர்ச்சி பெறாதவர்களின் கல்வி சான்றிதழ், Bank Account, வேலையில் பணிபுரிந்தால் அதற்கான சான்றிதல் (Employment proof).

அடுத்து வாகனம் எடுக்கும் முன் வாகனத்திற்கான Quotation கொடுப்பார்கள். அந்த வண்டியின் Quotation-ஐ அம்மா இருசக்கர வாகனத்தின் விண்ணப்ப படிவத்தில் இணைக்க வேண்டும்.

அண்மையில் எடுத்த போட்டோ 4,5 எடுத்துவைத்து கொள்ளவும்.

வாகனம் எடுத்த பிறகு மானியம் பெற:

முதலில் வாகனம் எடுத்த பிறகு மானியம் பெற வேண்டுமென்றால் RC கொடுக்க வேண்டும்.

முக்கியமாக ஓட்டுநர் உரிமம் (Driving Licence) வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் LLR போட்டு இருப்பவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

இணையதள முகவரி: 

இந்த திட்டத்தில் வாகனம் பெற அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளது என்றால் http://www.tamilnadumahalir.org/ என்ற வலைதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யவும்.

two wheeler scheme

இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு நீங்கள் கிராமத்தினை சேர்ந்தவர்கள் என்றால் Rural என்பதை கிளிக் செய்யவும்.

நகர்ப்புற பகுதியை சார்ந்தவர்கள் என்றால் அர்பன் என்பதை கிளிக் செய்யவும்.

விண்ணப்ப படிவத்தை சேர்க்கும் இடம்:

விண்ணப்ப படிவத்தை நிரப்பிய பிறகு BDO அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் சென்று கொடுக்க வேண்டும்.

படிவத்தை கொடுத்த பிறகு அறிவிப்பு வெளியான பிறகு முதலில் யார் கொடுக்கிறார்களோஅவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்ப படிவத்தை எப்படி நிரப்புவது:

two wheeler scheme

இந்த விண்ணப்ப படிவத்தில் புகைப்படம் உள்ள இடத்தில் பயனாளரின் போட்டோ ஓட்டவேண்டும். அடுத்து அலுவலக பயன்பாட்டில் இருப்பதை எதுவும் நிரப்ப கூடாது.

அடுத்ததாக கீழே மாவட்டம், வட்டாரம், கிராம ஊராட்சி, தகப்பனார்/ கணவர் பெயர், விண்ணப்பதாரர் பெயர், பாலினம்(பெண்/திருநங்கை), வீட்டு முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி(18-40 வயது உள்ளவர்கள்), ஆதார் எண் நிரப்ப வேண்டும்.

திருமண நிலை, மதம், இனம், கல்வி தகுதி, தொழில், ஆண்டு வருமானம், ஓட்டுநர் உரிமம் அல்லது LLR எண், வங்கி கணக்கு விவரம் அனைத்தையும் நிரப்பவும்.

இறுதியாக என்னென்ன ஆவணங்கள் இணைத்துள்ளோம் என்பதை இந்த பகுதியில் Tick கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்ப படிவமானது புதிதாக வாகனம் எடுப்பவர்களுக்கு பொருந்தும்.

வாகனம் எடுத்த பிறகு மானியம் பெறுவதற்கு தனியாக விண்ணப்ப படிவம் இருக்கிறது. மானியம் விடுவிக்க கோரும் என்ற படிவத்தை டவுன்லோடு செய்து அவற்றில் சரியானவற்றை நிரப்பி BDO அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டால் தங்களின் வங்கி கணக்கிற்கு தொகை வந்து சேர்ந்துவிடும்.

newமத்திய அரசு வீடு கட்டும் திட்டம் 2020..! ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!