Anticipated Endowment Assurance
இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைப்பதை விட அதை ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதே சிறந்தது. அதனால் தான் பலரும் இற்றைய நிலையில் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்ய முன் வருகிறார்கள். உங்களுக்கு உதவும் வகையில் இந்தியன் போஸ்ட் ஆபீஸ் பொது மக்களின் நலன் கருதி பலவகையான சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீடு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் Postal Life Insurance என்ற திட்டத்தில் இருக்கும் Anticipated Endowment Assurance என்ற திட்டத்தை பற்றி தெளிவாக இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
என்னது போஸ்ட் ஆபீஸில் இப்படி ஒரு அருமையான திட்டம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..! |
Anticipated Endowment Assurance Policy in Tamil:
AEA (Anticipated Endowment Assurance) என்பது எதிர்பார்க்கப்பட்ட எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியைக் குறிக்கிறது. இது சுமங்கல் (Sumangal) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு முதலீட்டு மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டமாக செயல்படுகிறது. மேலும் இது பணம் திரும்பப் பெறும் காப்பீட்டு திட்டமாகும்.
நீங்கள் தவணை முறையில் பணம் செலுத்த விரும்பினால் இந்த திட்டம் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். இந்த திட்டத்தில் 25%, 1 வது காலத்தின் முடிவிலும், 25%, 2 வது காலத்தின் முடிவிலும் செலுத்தப்படும். அதுபோல மீதமுள்ள 50% காலம் முதிர்ச்சியடைந்தவுடன் செலுத்தப்படும்.
இந்த திட்டத்தில் நீங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பலன்களைப் பெறுவீர்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் பலன்கள் மற்றும் வருமானம் தேவைப்படுபவர்களுக்கு இந்தக் கொள்கை பொருத்தமானது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 போஸ்ட் ஆபீஸின் அசத்தலான ஆயுள் காப்பீடு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இந்த திட்டத்தில் கடன் வசதியும் உள்ளது. இதில் 3 வருடங்கள் முடிந்த பிறகு நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் 5 வருடங்கள் முடிவதற்குள் உங்கள் பாலிசியை கடனுக்காக அடகு வைத்தால் உங்களுக்கு போனஸ் கிடைக்காது.
மரணப்பலன்:
பாலிசி காலத்தின் போது பயனாளி மரணம் அடைந்தால், முழு காப்பீட்டுத் தொகையும், இறப்பு நாள் வரை திரட்டப்பட்ட போனஸும் உங்கள் நாமினிகள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும்.
வயது வரம்பு:
- 15 வருட திட்டத்திற்கு: குறைந்தபட்சம் வயது 19 ஆகவும் அதிகபட்ச வயது 45 ஆகவும் இருக்க வேண்டும்.
- 20 வருட திட்டத்திற்கு: குறைந்தபட்சம் வயது 19 ஆகவும் அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தின் கீழ் லோன் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன..?
தொகை மற்றும் போனஸ் விகிதம்:
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 20,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 50 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
தற்போதைய போனஸ் விகிதம் ரூ. 48 மற்றும் வருடத்திற்கு 1,000 ரூபாய் காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. போனஸ் விகிதம் நிர்ணயம் செய்யப்படவில்லை மற்றும் அரசு அறிவித்தபடி போனஸ் விகிதம் அவ்வப்போது மாறும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 போஸ்ட் ஆபீஸில் இன்சூரஸ் எடுத்தால் எவ்வளவு போனஸ் வழங்கப்படுகிறது தெரியுமா?
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |