Atal Pension Yojana scheme details in tamil
நண்பர்களுக்கு வணக்கம் தினமும் ஒவ்வொரு வகையான திட்டங்களை பற்றி பதிவு செய்து வருகின்றோம் அந்த வகையில் இன்று நாம் அரசு வழங்கும் ஒரு அருமையான பென்ஷன் திட்டத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். குறிப்பாக இந்த பென்ஷன் திட்டத்தில் நீங்கள் மாதம் மாதம் 5000 ரூபாய் பெறலாம். மேலும் உங்கள் மகன் அல்லது மகளுக்கு Rs.8,50,000/- மொத்தமாக கிடைக்கும். அப்படிபட்டி ஒரு பென்ஷன் திட்டம் தான் இது. சரி வாங்க அது என்ன பென்ஷன் திட்டம் என்று இப்பொழு நாம் பாக்கலாம்.
அடல் பென்ஷன் யோஜனா ஸ்கீம் – APY Scheme Details in Tamil:
மத்திய அரசு இந்திய குடிமக்கள் அனைவரும் தங்களது ஓய்வு காலங்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை பென்ஷனாக பெற வேண்டும் என்பதற்காக கொண்டு வந்த ஒரு திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா ஸ்கீம்.
இந்த ஸ்கீமில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவருமே இந்திய குடிமக்கள் அனைவருமே ஜெயின் செய்யலாம்.
இந்த ஸ்கீமி நீங்கள் எங்கெல்லாம் ஜெயின் செய்யலாம் என்றால் உங்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சென்று இந்த பென்ஷன் திட்டத்தில் ஜெயின் செய்யலாம்.
நீங்கள் இந்த பென்ஷன் திட்டத்தில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்ய வேண்டும் என்றால். உங்கள் வயது மற்றும் நீங்கள் எவ்வளவு பென்ஷன் தொகையை தேர்வு செய்கின்றிர்களோ அதனை பொறுத்து நீங்கள் ஒவ்வொரு மதமும் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்பதை அட்டவணை மூலமாக உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.
இந்த அடல் பென்ஷன் யோஜனா ஸ்கீமில் ஜெயின் செய்த பிறகு உங்களுடைய 60-வது வயது வரை ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் டெபாசிட் செய்ய வேண்டும்.
60-வது வயதிற்கு பிறகு உங்கள் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு தொகையை நீங்கள் பென்ஷனாக தேர்வு செய்தீர்களோ அந்த தொகையை உங்களுக்கு பென்ஷனாக வழங்குவார்கள்.
உங்களுடைய வாழ்நாள் முடிந்ததும் அதாவது கணவர் இந்த அக்கௌன்டில் கணக்கு திறந்திருந்தால் அவர்களுடைய மனைவிக்கு இந்த திட்டத்தில் பென்ஷன் வழங்குவார்கள்.
கணவன் மனைவி இருவரும் இறக்கும் பட்சத்தில் அவர்களுடைய நாமினி வாரிசுதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்குவார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
10 ஆயிரம் போட்டால் 16 லட்சம் கிடைக்கும்.. அருமையான சேமிப்பு திட்டம்..!
பென்ஷன் தொகையாக நீங்கள் எவ்வளவு தேர்வு செய்திருந்தால் உங்களுக்கு நாமினிக்கு மொத்தம் தொகையாக எவ்வளவு கிடைக்கும் என்பதை கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம் வாங்க:
வயது | பென்ஷன் தொகை | மாதம் செலுத்த வேண்டிய தொகை | 60 வயதிற்கு பிறகு வழங்கப்படும் பென்ஷன் தொகை | நாமினிக்கு வழங்கப்படும் தொகை |
18 | 1000 | 42 | 1000 | 170000 |
18 | 2000 | 84 | 2000 | 340000 |
18 | 3000 | 126 | 3000 | 510000 |
18 | 4000 | 168 | 4000 | 680000 |
18 | 5000 | 210 | 5000 | 850000 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
என்னது போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கு இவ்வளவு அருமையான ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளதா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |