APY scheme details in tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. ஒவ்வொரு மாதமும் ரூபாய் 5000 ரூபாய் பெறக்கூடிய ஒரு அருமையான பென்ஷன் திட்டத்தை பற்றி தான் நாம் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். இது ஒரு மத்திய அரசு திட்டம் ஆகும். சரி வாங்க இது என்ன திட்டம், எப்படி பயன் பெறலாம் என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அடல் பென்ஷன் யோஜனா ஸ்கீம்:
மத்திய அரசு இந்திய குடிமக்கள் அனைவருமே தங்களுடைய ஓய்வு காலங்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை பென்ஷனாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவந்த திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா ஸ்கீம்.
இந்த ஸ்கிமில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் பயன் பெறலாம்.
இந்த ஸ்கீமில் நீங்கள் எப்படி இணையலாம் என்றால் உங்கள் அருகில் உள்ள வங்கி அல்லது அஞ்சல் நிலையத்திற்கு சென்று இந்த ஸ்கீமிற்கு அக்கவவுண்ட் ஓபன் செய்யலாம்.
இத்திட்டத்தில் நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்யலாம் என்றால் உங்கள் வயது மற்றும் நீங்கள் உங்கள் ஓய்வு காலத்தில் எவ்வளவு பென்ஷன் தொகையை பெற வேண்டும் என்று விரும்புகீர்கள் ஆகியவற்றை பொறுத்து உங்களுக்கு அட்டவணை மூலமாக எவ்வளவு முதலீடு செய்து வர வேண்டும் என்று கொடுத்துள்ளனர்.
ஒருவர் இந்த அடல் பென்ஷன் யோஜனா ஸ்கீமில் அக்கௌன்ட் ஓபன் செய்துவிட்டால் உங்களுடைய 60 வயது வரை ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வர வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வங்கியில் 2000 சேமித்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்..?
60 வயதிற்கு பிறகு உங்கள் வாழ்நாள் முழுவது நீங்கள் எவ்வளவு தொகையை மாதம் மாதம் பெற வேண்டும் என்று விரும்புனீர்களோ அந்த தொகையை உங்களுக்கு மாதம் மாதம் வழங்குவார்கள்.
இந்த அக்கவுண்டை கணவன் ஓபன் செய்திருந்தால், ஒருவேளை அவர் இறக்கும் பட்சத்தில் அவருடைய மனைவிக்கு அந்த பென்ஷன் தொகை வழங்கட்டும், மனைவி இந்த கணக்கை ஓபன் செய்திருந்தால் ஒருவேளை அவர் இறக்கும் பட்சத்தில் அவருடைய கணவனுக்கு அந்த பென்ஷன் தொகை வழங்கட்டும்.
கணவன் மனைவி இருவரும் இறக்கும் பட்சத்தில் அவர்களுடைய நாமினிக்கு ஒரு பெரிய தொகை வழங்கப்படும்.
நீங்கள் பென்ஷன் தொகையாக எவ்வளவு தேர்வு செய்திருந்தால் உங்கள் நாமினிக்கு எவ்வளவு வழங்கப்படும் என்று இப்பொழுது கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம்:
18 வயதில் இந்த ஸ்கீமில் இணைந்திருந்தால் எவ்வளவு கிடைக்கும் என்று பார்க்கலாம்.
வயது | பென்ஷன் தொகை | மதம் செலுத்த வேண்டிய தொகை | 60 வயதுக்கு பிறகு கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் தொகை | நாமினிக்கு வழங்கப்படும் தொகை |
18 | 1000 | 42 | 1000 | 170000 |
18 | 2000 | 84 | 2000 | 340000 |
18 | 3000 | 126 | 3000 | 510000 |
18 | 4000 | 168 | 4000 | 680000 |
18 | 5000 | 210 | 5000 | 850000 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Rs.20/- செலுத்தினால் Rs.2,00,000/- லட்சம் பெறலாம் அருமையான முதலீட்டு திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |