வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் 5,000/- வழங்கும் திட்டம்..!

வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் 5,000/- வழங்கும் திட்டடம்..! Atal Pension Scheme Full Details in Tamil 2023..!

Atal Pension Scheme Full Details in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் வாழ்நாள் முழுவது மாதம் மாதம் 5000 ரூபாய் பென்ஷன் பெறக்கூடிய, மத்தியரசின் திட்டத்தை பற்றி தான் நாம் இன்றைய பதிவில் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். அனைவருக்கும் பென்ஷன் வழங்க வேண்டும் என்ற நோக்கோடு மத்திய அரசு ஜூன் 1, 2015-ஆம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா ஆகும். இந்த இந்த திட்டத்தில் இணைத்து ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் உங்களது 60-வது வயது வரை டெபாசிட் செய்து வந்தால். உங்களுக்கு 60-வது வயது ஆகிய பிறகு ஒவ்வொரு மாதம் 5000 ரூபாய் பென்ஷன் வழங்குவார்கள். உங்கள் வாழ் நாள் முடிந்தபிறகு உங்கள் துணைக்கு மாதம் மாதம் 5000 ரூபாய் பென்ஷன் வழங்குவார்கள். உங்கள் துணையின் வாழ்நாள் முடிந்த பிறகு. உங்கள் சந்ததியற்கு 8,50,000/- ரூபாயை மொத்தமாக வழங்குவார்கள். இந்திய அரசு இந்த திட்டத்தை செய்லபடுத்துவதால் மிகவும் நம்பகத்தமான திட்டம் என்று சொல்லலாம். சரி வாங்க இதற்கு என்ன தகுதி, எவ்வளவு மாதம் மாதம் டெபாசிட் செய்யலாம் போன்ற விவரங்களை படித்து பயன்பறலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 வருடத்தில் வட்டி மட்டுமே 2 லட்சம் ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டம் இதோ உங்களுக்காக ..!

யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்? – Atal Pension Scheme Full Details in Tamil

18 வயது பூர்த்தியான இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் பயன்பெறலாம். ஆக 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகத்திலும் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் போன்றவற்றில் இத்திட்டம் செயல்படுகிறது, அங்கு சென்று இந்த இத்திட்டம் குறித்த விவரங்களை கூறி இணையலாம். இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்க்கான அதிகபட்ச வயது 40 வயதாகும். ஆக நீங்கள் உங்கள் 18 வயது முதல் 40 வயது வரை இந்த திட்டத்தில் இணையலாம். இந்த அடல் பென்ஷன் திட்டத்தில் இணைய உங்களிடம் ஒரு Saving Account இருக்க வேண்டும்.

Pension Amount:

இந்த திட்டத்தில் மொத்தமாக ஐந்து விதமான பென்ஷன் அமவுண்ட் வழங்குகிறார்கள். அதாவது 1000 ரூபாய், 2000 ரூபாய், 3000 ரூபாய், 4000 ரூபாய், 5000 ரூபாய் என்று ஐந்து விதத்தில் Pension Amount வழங்கபடுகிறது.

இந்த Pension Amount-யில் நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்களோ, அதனை பொறுத்து உங்களது Contribution Amount மாறுபடும். அதேபோல் நீங்கள் தேர்வு செய்யும் Pension Amount பொறுத்துதான் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பென்ஷன் வழங்கப்படும்.

நாமினி அதாவது உங்கள் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் தொகை:

  • 1000 ரூபாய் பென்ஷனை நீங்கள் தேர்வு செய்திருந்தால் உங்கள் நாமினிக்கு 1,70,000/- ரூபாய் வழங்கப்படும்.
  • 2000 ரூபாய் பென்ஷனை நீங்கள் தேர்வு செய்திருந்தால் உங்கள் நாமினிக்கு 3,40,000/- ரூபாய் வழங்கப்படும்.
  • 3000 ரூபாய் பென்ஷனை நீங்கள் தேர்வு செய்திருந்தால் உங்கள் நாமினிக்கு 5,10,000/- ரூபாய் வழங்கப்படும்.
  • 4000 ரூபாய் பென்ஷனை நீங்கள் தேர்வு செய்திருந்தால் உங்கள் நாமினிக்கு 6,80,000/- ரூபாய் வழங்கப்படும்.
  • 5000 ரூபாய் பென்ஷனை நீங்கள் தேர்வு செய்திருந்தால் உங்கள் நாமினிக்கு 8,50,000/- ரூபாய் வழங்கப்படும்.

Contribution Chart:

நீங்கள் தேர்வு செய்யும் பென்ஷன் அமௌன்ட் பொறுத்து உங்களுக்கு Contribution அமௌன்ட் மாறுபடும். உங்களது 18 வயதில் 1000 ரூபாய் பென்ஷன் தொகையை தேர்வு செய்திருந்தால்.. மாதம் மாதம் உங்களது 42 வயதுவரை ரூபாய் 42-ஐ டெபாசிட் செய்ய வேண்டும். அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை டெபாசிட் செய்வதாக இருந்தால் 125 ரூபாய் செலுத்த வேண்டும். அல்லது வருட வருடம் செலுத்துவதாக இருந்தால் 248 ரூபாய் Contribution Amount-ஐ செலுத்த வேண்டும். சரி வாங்க தெளிவான விவரங்களுடன் Contribution Chart-ஐ கீழே பார்க்கலாம்.

Contribution Chart

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023 -ல் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுக்காப்பு திட்டத்தில் 3 லட்சம் இலவசமாக பெறலாம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil