புதிய பென்ஷன் திட்டம்
சேமிப்பு என்பது எப்படி அனைவருடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றாக உள்ளதோ. அதனை போலவே மற்றொன்றும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அது என்னவென்றால் பென்ஷன் திட்டம் தான். நாம் அனைவரும் நம்முடைய தேவைக்காக ஏதோ ஒரு வேலைக்கு சென்று அதன் மூலம் மாதந்தோறும் பணத்தினை பெற்று வருகிறோம். அப்படி நாம் பெரும் பணத்தில் குறிப்பிட்ட தொகையினை வேலை பார்க்கும் போதே சேமித்தால் போதும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நிலையான ஒரு தொகையினை பெற முடியும். அந்த வகையில் மத்திய அரசு ஒரு புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. ஆகையால் அத்தகைய பென்ஷன் திட்டத்தை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ மாதந்தோறும் 500 ரூபாய் போஸ்ட் ஆபீஸில் செலுத்தினால் போதும் 2,55,185 ரூபாய் வரை பெறக்கூடிய அருமையான சேமிப்பு திட்டம்..
Atal Pension Yojana 2023:
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த Atal Pension Yojana திட்டத்தில் இந்திய குடிமக்கள் அனைவரும் பயன்பெறலாம்.
அதுமட்டும் இல்லாமல் இத்தகைய திட்டத்தின் கீழ் ஒரு நபர் சேர்ந்து அவர் இறந்து போய்விட்டால் அவருடைய மனைவி இத்தகைய பென்ஷன் தொகை போய் சேரும். அதுவே கணவன் மனைவி என இரண்டு நபரும் இறந்து போய்விட்டால் பிள்ளைகளுக்கு அந்த தொகை போய் சேரும்.
மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் பயன்பெற வேண்டும் என்றால் போஸ்ட் ஆபீஸ் மற்றும் பேங்கில் சேர்ந்து கொள்ளலாம்.
வயது தகுதி:
இத்தகைய பென்ஷன் திட்டத்திற்கான குறைத்த பட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 40 ஆகும்.
முதலீடு தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் சேரும் போது உங்களுக்கான மாதாந்திர பென்ஷன் தொகையினை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் தொகையினை பொறுத்து நீங்கள் மாதம் செலுத்த வேண்டிய தொகை அமையும்.
அடல் பென்ஷன் யோஜனா திட்டம் 2023:
18 வயது உள்ள நபர் இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொகையினை பென்ஷன் தொகையினை தேர்வு செய்து இருந்தால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Atal Pension Yojana 2023 | ||||
வயது | தேர்வு செய்த பென்ஷன் தொகை | மாதாந்திர தொகை | மாதம் வழங்கப்படும் பென்ஷன் தொகை | வாரிசுக்கு வழங்கப்படும் மொத்த தொகை |
18 வயது | 1000 ரூபாய் | 42 ரூபாய் | 1000 ரூபாய் | 1,70,000 ரூபாய் |
18 வயது | 2000 ரூபாய் | 84 ரூபாய் | 2000 ரூபாய் | 3,40,000 ரூபாய் |
18 வயது | 3000 ரூபாய் | 126 ரூபாய் | 3000 ரூபாய் | 5,10,000 ரூபாய் |
18 வயது | 4000 ரூபாய் | 168 ரூபாய் | 4000 ரூபாய் | 6,80,000 ரூபாய் |
18 வயது | 5000 ரூபாய் | 210 ரூபாய் | 5000 ரூபாய் | 8,50,000 ரூபாய் |
இதையும் படியுங்கள்⇒ தபால் நிலையத்தில் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் Rs.1,62,647/- பெறும் அருமையான திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |