மாதந்தோறும் 168 ரூபாய் செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் 4,000 ரூபாய் பெறும் அரசின் திட்டம்

Advertisement

அடல் பென்ஷன் திட்டம் 

அனைவருமே பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றோம். ஆனால் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பயனுள்ள வகையில் சேமிப்பது ரொம்ப முக்கியமானது. நம் பதிவில் தினந்தோறும் பல் வகையான திட்டங்களை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம்.  இந்திய குடிமக்கள் அனைவரும் 60 வயதிற்கு பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையை பென்ஷனாக பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அடல் பென்சன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தை பற்றிய தகவலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

 

சீனியர் சிட்டிசனுக்கான அருமையான திட்டம்..

அடல் பென்ஷன் திட்டம் பற்றிய தகவல்:

இந்த திட்டத்தில் பயனடைய இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது உடையவர்களாகவும், அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வங்கிகளில் அல்லது தபால் துறையிலோ கணக்கு வைத்திருக்க வேண்டும்.

 5 வகை:

1000 முத்த 5000 ரூபாய் வரை தருகின்றனர். 60 வயதிற்கு பிறகு எவ்வளவு பென்சன் வேண்டுமோ அதை இந்த திட்டத்தில் சேரும் போதே செலக்ட் செய்ய வேண்டும்.நீங்கள் செலக்ட் செய்த பென்சன் தொகை மற்றும் உங்களின் வயதை பொறுத்து பிரீமியம் தொகை மாறுபடும். இந்த திட்டத்தில் பிரீமியம் தொகையை மாதந்தோறும் அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை செலுத்தலாம்.

அடல் பென்ஷன் திட்டம் சார்ட்:

வயது பணம் செலுத்த வேண்டிய காலம் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000 மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2000 மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3000 மாதாந்திர ஓய்வூதியம் ரூ.4000 மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5000
ரூ.1.7 லட்சம் ரூ.3.4 லட்சம் ரூ.5.1 லட்சம் ரூ.6.8 லட்சம் ரூ.8.5 லட்சம்
18 42 ஆண்டு ரூ.42 ரூ.84 ரூ.126 ரூ.168 ரூ.210
19 41 ஆண்டு ரூ.46 ரூ.92 ரூ.138 ரூ.183 ரூ.228
20 40 ஆண்டு ரூ.50 ரூ.100 ரூ.150 ரூ.198 ரூ.248
21 39 ஆண்டு ரூ.54 ரூ.108 ரூ.162 ரூ.215 ரூ.269
22 38 ஆண்டு ரூ.59 ரூ.117 ரூ.177 ரூ.234 ரூ.292
23 37 ஆண்டு ரூ.64 ரூ.127 ரூ.192 ரூ.254 ரூ.318
24 36 ஆண்டு ரூ.70 ரூ.139 ரூ.208 ரூ.277 ரூ.346
25 35 ஆண்டு ரூ.76 ரூ.151 ரூ.226 ரூ.301 ரூ.376
26 34 ஆண்டு ரூ.82 ரூ.164 ரூ.246 ரூ.327 ரூ.409
27 33 ஆண்டு ரூ.90 ரூ.178 ரூ.268 ரூ.356 ரூ.446
28 32 ஆண்டு ரூ.97 ரூ.194 ரூ.292 ரூ.388 ரூ.485
29 31 ஆண்டு ரூ.106 ரூ.212 ரூ.318 ரூ.423 ரூ.529
30 30 ஆண்டு ரூ.116 ரூ.231 ரூ.347 ரூ.462 ரூ.577
31 29 ஆண்டு ரூ.126 ரூ.252 ரூ.379 ரூ.504 ரூ.630
32 28 ஆண்டு ரூ.138 ரூ.272 ரூ.414 ரூ.551 ரூ.689
33 27 ஆண்டு ரூ.151 ரூ.302 ரூ.453 ரூ.602 ரூ.752
34 26 ஆண்டு ரூ.165 ரூ.330 ரூ.495 ரூ.659 ரூ.824
35 25 ஆண்டு ரூ.181 ரூ.362 ரூ.543 ரூ.722 ரூ.902
36 24 ஆண்டு ரூ.198 ரூ.396 ரூ.594 ரூ.792 ரூ.990
37 23 ஆண்டு ரூ.218 ரூ.436 ரூ.654 ரூ.870 ரூ.1087
38 22 ஆண்டு ரூ.240 ரூ.480 ரூ.720 ரூ.957 ரூ.1196
39 21 ஆண்டு ரூ.264 ரூ.528 ரூ.792 ரூ.1054 ரூ.1318

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:

நீங்கள் எந்த வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களோ அந்த வங்கிக் கிளையில், இந்த அடல் பென்ஷன் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, முகவரி சான்று, அடையாள சான்றை கொடுக்க வேண்டும்

பணம் செலுத்தும் முறை:

அரசின் இந்த ஓய்வூதிய திட்டத்தின் சேர்ந்த பிறகு மாதம் மாதம் செலுத்த வேண்டிய சந்தா தொகையை, வங்கிக் கணக்கில் இருந்து ஆட்டோடெபிட் மூலம் செலுத்துவது போல் செய்து கொள்ளலாம். அதற்கு ஆதாரமாக உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். பணம் செலுத்தினாலும், பணம் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பது பலவும் எஸ்எம்எஸ் ஆக வரும்.

தபால் துறையில் மாதந்தோறும் 6167 ரூபாய் வருமானம் தரும் திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement