அடல் பென்ஷன் யோஜனா திட்டம் | Atal Pension Yojana Scheme in Tamil
பொதுவாக நாம் எப்போதும் சொந்த உழைப்பில் தான் வாழவேண்டும் என்று ஒரு எண்ணம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் அதனை சரியாக செய்யாமல் விட்டுவிட்டோம் என்றால் அது பிற்காலத்திற்கு உதவியாக இருக்காது. புரியவில்லையா, அதாவது நாம் எப்போதும் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்தால் அதனை நம்முடைய கடைசி காலத்தில் அதாவது 60 வயதிற்கு மேல் அந்த பணத்தை வைத்து ஒரு பென்ஷன் தொகையை மாதம் மாதம் பெறலாம். ஆகவே மாதம் மாதம் 1000 ரூபாய் 5000 ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும். அது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Atal Pension Yojana Scheme in Tamil:
இந்திய மக்கள் அனைவருமே 60 வயதிற்கு மேல் நிலையான வருமானம் பெறுவதற்கு கொண்டு வந்தது தான் Atal Pension Yojana திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தில் சேர்ந்தீர்கள் என்றால் உங்களுடைய 60 வயதிற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை பென்ஷனாக பெறலாம்.
உங்களுக்கு பிறகு உங்களுடைய மனைவி அந்த தொகையை பென்ஷனாக பெறுவார்கள். அதன் பிறகு அந்த தொகையை குழந்தைகள் மொத்தமாக பெறுவார்கள்.
இந்த திட்டத்தில் மொத்தம் 5 விதமான பென்ஷன் வழங்குகிறார்கள். இதில் உங்களுடைய தொகையை நீங்கள் தேர்வு செய்வதை பொறுத்து மாறுப்படும்.
இந்த திட்டத்தில் சேர்ந்து நீங்கள் 1000 ரூபாய் பென்ஷன் தொகையாக பெற்றால் அந்த தொகையை தான் பெறவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. அதனை நீங்கள் 5000 ரூபாயாக பெறலாம்.
இப்போது நீங்கள் 1000 ரூபாய் பென்ஷனாக பெற்றால் அதனை அதிகப்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் அதற்கான விண்ணப்பம் இருக்கும். அதனை சரியாக நிரப்பி உங்களின் மேல் அதிகாரிகளிடம் கொடுக்கலாம். இதன் நல்ல லாபத்தை பெற முடியும்.
ஒவ்வொரு 3 மாதமும் 30,000 பெறலாம் திட்டத்தின் முதிர்வு காலத்தில் Rs.7,00,000/- பெறும் திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |