மாதம் 5,000/- ரூபாய் வருமானம் தரக்கூடிய அரசு திட்டம்..! Atal pension Yojana scheme Tamil..!

Atal pension Yojana scheme Tamil

மாதம் 5,000/- ரூபாய் வருமானம் தரக்கூடிய அடல் பென்ஷன் யோஜனா திட்டம் விவரம்..! Prathama Manthiri Pension Scheme in Tamil..!

Atal pension Yojana scheme Tamil:- வணக்கம் நண்பர்களே..! இன்றை பொதுநலம் பதிவில் மாதம் மாதம் 5,000/- ரூபாய் வருமானம் தரக்கூடிய அரசு திட்டம் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த அடல் பென்ஷன் திட்டம் ஜூன் 1 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சரி இந்த திட்டத்தில் யாரெல்லாம் இணைந்து பயன்பெறலாம், இந்த திட்டத்தின் நோக்கம் என்ன?, இந்த திட்டத்தின் அம்சங்கள் போன்ற விவரங்களை பற்றி இப்பொழுது நாம் படித்தறிவோம் வாங்க.

தமிழ்நாடு அரசின் ரூ.5 லட்ச இலவச மருத்துவ காப்பீடு திட்டம்..!

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் / Atal pension Yojana scheme Tamil..!

இந்த திட்டத்தின் நோக்கம்:-

இந்த Atal pension Yojana scheme Tamil திட்டத்தின் நோக்கமே அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அவர்களது ஓய்வுக்காலங்களில் அதாவது 60 வயதிற்கு பின் மாதம், மாதம் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும்.

எனவே இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாக ஒரு சிறிய தொகையை வழங்கும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் – தகுதி:-

18 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணைய தகுதியுடையவர்கள்.

ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணைத்து பயன்பெறலாம். மேலும் இந்த கணக்கை தாங்கள் துவங்கும் பொழுது தங்களுக்குரிய நாமினியை தேர்வு செய்ய வேண்டும்.

யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது?

பென்ஷன் தொகை தரக்கூடிய திட்டத்தில் ஏற்கெனவே இணைத்திருப்பவர்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஏற்கனவே இணைத்திருப்பதாக கருதப்படுபவர்கள் இந்த திட்டத்தில் இணைய முடியும் என்றாலும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது.

அதேபோல், வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றாலும் அவர்களுக்கும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகை கிடைக்காது.

ஒருவேளை இப்போது அமைப்புசாரா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பிற்காலத்தில் அமைப்பு சார்ந்த துறையில் பணியில் சேர்ந்தால், எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தார்களோ, அந்த வங்கிக் கிளைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு தெரியப் படுத்தியவுடன் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை நிறுத்திக்கொள்ளும்.

கணக்கு தொடங்குவது எப்படி?

தாங்கள் எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பெற்று பிறகு விண்ணப்படைவதை பூர்த்தி செய்து, முகவரிசான்று, ஆதார் அட்டை, புகைப்பட அடையாள அட்டை போன்றவற்றைத் தங்களுடைய விண்ணப்பத்துடன் இணைத்து தரவேண்டும்.

பிறகு வங்கியில் தங்களுக்கு ஒரு ‘ப்ரான் எண்’ணை (PRAN NO) வழங்கும். அந்த ‘ப்ரான் எண்ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.

சவரன் தங்க பத்திர முதலீடு திட்டம்..! 

யார், எவ்வளவு தொகை செலுத்தலாம்?

நாம் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்போதே 60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்பார்கள்.

குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி அதிக பட்சமாக ரூ.5,000 வரை ஒருவர் பென்ஷனாக பெற நினைக்கும் தொகையைக் குறிப்பிடலாம்.

பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும்.

முதல் முறையாக இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன், இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு சாட்சியாக ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதுதான் ஒருவர் இத்திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம்.

அதேபோல் ஒவ்வொரு தவணை செலுத்தும் போதும் உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பப்படும்.

எப்படி பணம் செலுத்துவது?

ஒருவர் இத்திட்டத்தில் இணைந்த பின் மாதாம் மாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம். அதாவது நம் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வரவு வைக்கப்படும்.

நம் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, அது நம் ‘ப்ரான்’ கணக்கில் வரவு வைக்கப்பட்டதும் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

எப்போது பணம் எடுக்கப்படும்?

நாம் முதல் முறையாக அடல் திட்டத்தில் இணையும்போது எந்த தேதியில் பணம் செலுத்துகிறோமோ, அந்த தேதிதான் நம் அடுத்தடுத்த மாதத்தின் கெடு தேதி.

உதாரணமாக, ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 10-ம் தேதி அன்று தவணைக்கான பணம் எடுக்கப்படும்.

தொகையை அதிகரிக்கலாமா?

வருடத்துக்கு ஒரு முறை நாம் செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வசதி மூலம் நாம் மாதாம் மாதம் செலுத்தும் பென்ஷன் தொகையை அதிகரித்துக்கொள்ளவோ அல்லது குறைத்துக்கொள்ளவோ முடியும்.

பெனால்டி விபரம்:

இந்தத் Atal pension Yojana scheme Tamil திட்டத்தில் சேர்ந்த பின் சரியாக பணம் கட்ட வில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

அதாவது தாங்கள் மாதம் மாதம் 100 ரூபாய் பணம் செலுத்துகின்றீர்கள் என்றால்.. அந்த தொகையை ஏதாவது ஒரு மாதம் கட்டதவறினால், அந்த தொகையை அடுத்தமாதம் செலுத்தும் பொழுது 101 ரூபாய் அபராத தொகையாக செலுத்த வேண்டும்.

அதேபோல் ரூ.101 முதல் 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.

தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், நம் சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும்.

தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டு, திட்டத்திலிருந்து நீக்கப்படுவார்கள்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil